கோலாலம்பூர், மே 20-
இங்குள்ள ஜாலான் கிள்ளான் லாமா கட்டுமான தளம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் அவ்வட்டாரமே பெரும் பரபரப்பானது.
ஸ்காட் கார்டன் பகுதியின் அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் திடிரென ஏற்பட்ட தீயினால் அதன் முதல் மாடி முற்றாக அழிந்தது.
இன்று காலை 9.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை தொடர்ந்து செப்பூத்தே, ஹங் துவா, புக்கிட் ஜாலில், ஸ்ரீ பெட்டாலிங், தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் ஆகிய வட்டாரங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைநதனர். கிட்டத்தட்ட 53 வீரர்கள் கடுமையான போரட்டத்திற்கு இடையே காலை 10.49 மணியளவில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்று அக்குழுவின் தலைவர் ஜாபாரி பின் தாஜூடின் கூறினார்.
தீயில் அழிந்த கட்டுமான தளத்தின் முதல் மாடியில் மேம்பாட்டு பணிகளுக்கான பல பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்பொருட்கள் 80 விழுக்காடு சேதம் அடைந்ததாக அவர் கூறினார். இச்சம்பவத்தில் உயிர் சேதம் இல்லை என்பதையும் அவர் உறுதி படுத்தினார்.