37 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்யப்பட உள்ள பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பிரபல ஹீரோ நடிக்க உள்ளார்.
பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் கடந்த 1983ஆம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு. ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த இந்த படத்தை பாக்யராஜே இயக்கி இருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
37 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்யப்படவுள்ள இத்திரைபடத்தின் ரீமேக் உரிமையை ஏ.வி.எம். நிறுவனத்திடம் இருந்து ஜே.எஸ்.பி. சதீஷ் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தையும் பாக்யராஜ் தான் இயக்கவுள்ளார். இதில் ஹீரோவாக சசிகுமார் நடிக்கவுள்ளதாகவும் இந்த திரைபடத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு கொரோனா ஊரடங்குக்கு பின் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.