பிள்ளைகளின் முன்னிலையில் கொடூரமாக கொல்லப்பட்ட தாய்

சுவிட்சர்லாந்தில் சமையல் கத்தியால் தாயார் ஒருவர் பிள்ளைகளின் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி தொடர்பில் முக்கிய தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. Albert-Hitzig-Strasse பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் 38 வயதான நபர் தமது அண்டௌ வீட்டாரான 37 வயது பெண்மணியை அவரது குடியிருப்புக்குள் புகுந்து, பிள்ளைகளின் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பொலிசார் குறித்த குற்றவாளியை உடனடியாக கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அந்த நபருக்கு உளவியல் பாதிப்பு இருப்பதை பொலிசார் கண்டறிந்தனர். இதனையடுத்து மன நல காப்பகம் ஒன்றில், தனியாக அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதனன்று முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற விசாரணையில், அந்த 38 வயது ஜேர்மானியருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

உளவியல் பாதிப்பு காரணமாகவே குறித்த நபர் தமது அண்டை வீட்டாரான அந்த பெண்மணியை அவரது குடியிருப்புக்குள் புகுந்து தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர், சமையல் கத்தியை பயன்படுத்தி இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். கண்மூடித்தனமாக தாக்கியதில் 11 வெட்டுக்காயங்கள் அந்த சடலத்தில் காணப்பட்டுள்ளது.

இந்த கொலைவெறி சம்பவமானது, அந்த ஜேர்மானியரின் நண்பர்களுக்கும், அவரது அண்டை வீட்டாருக்கும் ஒருவித அதிர்ச்சியை அளித்துள்ளது. காரணம், அந்த நபர் இதுவரை எவ்வித குற்றச்செயலிலும் ஈடுபட்டதில்லை என்பது மட்டுமல்ல, அவருக்கு இதுவரை தாம் கொலை செய்ததும் நினைவில் இல்லை. தற்போது இந்த வழக்கில் முக்கிய தீர்ப்பாக, அந்த நபரை உளவியல் காப்பகத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here