மோட்டோரோலா நிறுவனம் இரண்டாம் தலைமுறை மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை லெனோவோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும் புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகலாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
அதன்படி இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டிற்குள் அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. 2019 மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விற்பனை பிப்ரவரி மாத வாக்கில் விற்பனைக்கு வந்ததுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1.25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனால் இரண்டாம் தலைமுறை மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனின் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய மாடலின் விலையை கருத்தில் கொண்டு புதிய மாடல் விலை குறைவாக நிர்ணயிக்கப்படலாம் என தெரிகிறது.
மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மடங்கக்கூடிய OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை பாதியாக மடிக்க வழி செய்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் இரண்டாவது ஸ்கிரீன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஸ்கிரீனினை குவிக் வியூ எக்ஸ்டெர்னல் டிஸ்ப்ளே என அழைக்கப்படுகிறது.