சீனாவுக்கு கிடுக்கிப்பிடி போடும் பாதுகாப்பு சட்ட மசோதா – அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் விவகாரத்தில் உலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசு அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

அமெரிக்காவில் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை சின்னாபின்னமாக்கி விட்ட சீனாவை சும்மா விடக்கூடாது என்ற மன நிலை, அந்த நாட்டு அரசியல்வாதிகளிடம் மேலோங்கி வருகிறது.

கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையும் அங்கு 1 லட்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சீனாவுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகத்துக்கு ஆளும் குடியரசு கட்சி எம்.பி.க்களே அழுத்தம் தந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் குடியரசு கட்சி செனட் சபை எம்.பி.க்களான டெட் குரூஸ், ரிக் ஸ்காட், மைக் பிரான், மார்ஷா பிளாக்பர்ன், ஜோனி எர்னஸ்ட், மார்த்தா மெக்சல்லி, டாம் காட்டன் ஆகியோர் செனட் சபையில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்தனர்.

இந்த மசோதா சீனாவுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி தொழில் நுட்பத்தை சீனா திருட முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியை திருடுவதையும், சேதப்படுத்துவதையும் தடுக்கிற வகையில் இந்த மசோதாவை செனட் சபையில் குடியரசு கட்சியின் மூத்த எம்.பி.க்கள் தாக்கல் செய்து பேசினார்கள்.

டெட் குரூஸ் பேசும்போது, “கொரோனா வைரஸ் பரவலை மூடி மறைத்த சீன கம்யூனிஸ்டு கட்சி, அரசு நிதி அளித்து, அறிவுசார் சொத்து திருட்டில் ஈடுபடுகிறது. அமெரிக்காவின் ஆராய்ச்சி மற்றும் தடுப்பூசியின் வளர்ச்சியில் சீனாவை திருடவும், தலையிடவும் நாம் அனுமதிக்க முடியாது” என ஆவேசமாக கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு சீன கம்யூனிஸ்டு கட்சிதான் முழு பொறுப்பு. அதன் பொய்கள் மற்றும் தவறான தகவல்களால் அமெரிக்கர்களின் உயிர்கள் பறி போகின்றன என்று ரிக் ஸ்காட் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “இதற்கு சீன கம்யூனிஸ்டு கட்சியை நாம் அனுமதிக்க முடியாது. எந்தவொரு அமெரிக்க முயற்சிகளையும், சீன கம்யூனிஸ்டு கட்சி திருடுவதையோ, நாசப்படுத்தவோ விட முடியாது. கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பு மசோதா. இந்த தொற்றுநோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சியை பாதுகாக்கும். இதற்காக நாங்கள் பணியாற்றுகிறோம்” என்றும் கூறினார்.

குடியரசு கட்சி கொறடா ஸ்டீவ் ஸ்காலிஸ் பேசும்போது, கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா, உலகத்துக்கு பொய் தகவல்களை சொன்னதாக குற்றம் சாட்டினார். கொரோனா வைரஸ் தொற்று உருவாகி பரவத்தொடங்கிய டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் வைரஸ் பற்றிய ஆதாரங்களை சீனா தடுத்து நிறுத்தி விட்டது. மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள், பரவல் அளவிற்கான சான்றுகள் ஆகியவற்றை அமெரிக்கா மற்றும் பிற மருத்துவ நிபுணர்களுக்கு தர பல வாரங்களாக சீனா மறுத்து விட்டது என்று சாடினார்.

அத்துடன், “ இந்த நேரத்தில், சீனாவின் முக கவசங்கள் மற்றும் பிற உயிர்காக்கும் சுய பாதுகாப்பு சாதனங்கள், கையுறைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி திணறடிக்ககூடிய அளவில் இருந்தன. சீனாவுக்கு இந்த வைரசால் எழுந்துள்ள அச்சுறுத்தல் தெரியும். எல்லா உண்மைகளையும் அவர்கள் மறைத்து விட்டனர். முக்கிய மருத்துவ பொருட்களை சேமித்து இருப்பு வைப்பதற்கு அவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்தினர்” என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த சட்ட மசோதா மீதான ஆய்வு முடிந்ததும், அது குடியேற்றமற்ற அனைத்து மாணவர் விசா வைத்திருக்கிற சீனர்கள் குறிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களை அணுகக்கூடியவர்களை கண்காணிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரிக்கு அதிகாரம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதற்கிடையே இந்த விவகாரம் பற்றி மிச்சிகனில் ஆப்பிரிக்க, அமெரிக்க தலைவர்கள் மத்தியில் டிரம்ப் பேசினார். அப்போது அவர், “உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் வந்தது. இதை அமெரிக்கா லேசாக எடுத்துக்கொள்ளாது. நாங்கள் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அந்த மை உலர்வதற்குள், இந்த கொரோனா வைரஸ் தொற்று வெடித்துள்ளது. இதை நாங்கள் சாதாரணமாக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here