இஸ்ரேல் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீங்க..விளைவு மோசமாக இருக்கும்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தலையிடாமல் தள்ளியே இருங்கள் என்று அமெரிக்காவுக்கு ஈரான் அரசு எச்சரித்துள்ளது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் படைகள் மீது அவ்வப்போது சில தாக்குதல்களை தொடுத்து வந்தனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருந்த ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான் வாழி தாக்குதலை நடத்தியது. இதில் 2 ராணுவ ஜெனரல்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால், இஸ்ரேல் மீது கடும் கோபத்தில் ஈரான் இருக்கிறது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் உங்கள் மீது தாக்குதல் நடத்தலாம், உஷாராக இருங்கள் என அமெரிக்கா இஸ்ரேலை எச்சரித்திருந்தது.

இதனையடுத்து அமெரிக்கா எச்சரித்ததை போல நேற்றிரவு ஈரான் இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளது. நேற்றிரவு மட்டும் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியிருக்கிறது. இதனால் இஸ்ரேல் மக்கள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்திருக்கின்றனர்.

இதுவரை பாலஸ்தீனம்-இஸ்ரேல் என இருந்த போார் தற்போது பாலஸ்தீனம், ஈரான் vs இஸ்ரேல் என மாறியிருக்கிறது. இது குறித்து விளக்கமளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் நிரந்தர தூதுக்குழு,

“சட்டப்பூர்வமான பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. சாசனத்தின் 51 வது பிரிவின் அடிப்படையில் ஈரான் எதிர்ப்பு நடவடிக்கையி8ல் இறங்கியுள்ளது. பதிலடி கொடுக்க ஈரானுக்கு முழு உரிமையும் இருக்கிறது. இந்த மோதலில் இஸ்ரேல் மற்றுமொறு தவறு ஏதேனும் செய்தால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது முழுக்க முழுக்க ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல். இதில் அமெரிக்க தலையிட நினைக்க வேண்டாம். விலகி இருப்பதே அவர்களுக்கு நல்லது” என்று எச்சரித்துள்ளது.

ஆனால், ஈரானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா கூடுதல் ஐயன் டோம் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியுள்ளது. மட்டுமல்லாது, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்லாது, பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்திருக்கிறது. அதாவது ரைப்ரஸ் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டன் போர் விமானங்கள் இஸ்ரேலுக்கு உதவ அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது. இதில், ஈரானின் பாதுகாப்பு படையை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்த இருக்கிறது. மறுபுறம் ஈரானுக்கு ஆதரவாக ரஷ்ய, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here