காரில் சிக்கிய குழந்தை மீட்பு

குழந்தைகளைக் காரில் வைத்து பூட்டிவிடும் சம்பவங்கள் மிக அதிகம். பல பெற்றோர்கள் மன அழுத்தத்தால் இப்படிச் செய்வதுண்டு. காரில் பிள்ளை இருப்பதையே மறந்து. காரைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்ற பெற்றோரும் உண்டு. பெற்றோரின் வேலைப்பளு குடும்பப் பிரச்சினை ஆகியவற்றால் மன அழுத்தத்துக்கு ஆளாகி இப்படிச் செய்வதுண்டு.

இதற்கும் மேலாக, குழந்தையை காரில் அமர்த்திவிட்டு , அல்லது தூங்கும் குழந்தையை எழுப்பாமல் இயந்திரத்தை முடுக்கிவிட்ட நிலையில் விட்டுச் செல்வதும் உண்டு. அதனால் பல தொல்லைகளுக்கு ஆளான சம்பவங்களும் உண்டு.

இயந்திரம் இயங்காமல் போனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்த சம்பவங்களும் உண்டு.

அண்மையில் ஒரு சம்பவம் . நான்கு வயது சிறுவன் காரில் இருந்தபோது கார் பூட்டிக்கொண்டது. சிறுவனுக்குக் கார் கதவைத்திறக்கத் தெரியவில்லை. புது ரகக்கார்களில் குழந்தைகளுக்கான காப்பு வசதி சிறப்பானதாக இல்லை என்றே தெரிகிறது.

இதற்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். கதவைத்திறந்து சிறுவனை மீட்டனர். காரையும் பாதுகாப்பாக மீட்டனர்,

இதில் கவனிக்கப்படவேண்டிய முக்கிய செய்தி பெற்றோர்களின் கவனக்குறைவு. இதற்கு கார்கள் வாங்கும்போதே கார் நிறுவனம் பயிற்சி வழங்க வேண்டும். அல்லது காரோட்டும் பயிற்சியில் மீட்பு பற்றியும் பயிற்சிகள் வழங்கினால் தீயணைப்பு வீரர்களுக்கு வீண் சிரமம் இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here