முகக்கவசங்கள் கூறும் முன்னுரை

உபயோகத்திற்குபின் முகக்கவசங்களை எங்கே வீசுவது என்ற கவலை பலருக்கு இருக்கலாம். ஒரே வீட்டில் உள்ளவர்களுக்கு அந்த கவலை அதிகரித்திருக்கும்.

கழற்றி வைக்கப்படும் முகக்கவசங்கள் ஒரே மாதிரியாக இருந்தால் பிறகு உபயோகப்படுத்தும் சமயத்தில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு ஒரே வழி உபயோகத்திற்குப்பின் அவற்றை வீசி எறிவதுதான்.

வீசி எறிவது என்பதிலும் கவனமாகக் கையாளவேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் ஒருவர்.

முகக்கவசங்கள் குறித்து டான்ஶ்ரீ லீ லாம் தாய் கூறிய கருத்துக்கு அவர் இப்பதிலைக் கூறியிருக்கிறார்.

முகக்கவசங்களை வீசுவதில், அல்லது குப்பைக் கூடைகளில் சேர்ப்பதில் பல பிரச்சினைகள் உருவாகலாம். அதற்கு முகக்கவசங்களை உபயோகித்தபின் அவற்றைச் சோப்பிட்டுத் துவைத்து, இருபுறமும் உள்ள கயிற்றால் கட்டி குப்பையில் போடுவது பாதுகப்பாக இருக்கும் என்று யோசனை கூறியிருக்கிறார் அமருத்துவர்.

இப்படிச்செய்வதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கபடும். அதேவேளை யாருக்கும் தீங்கு ஏற்படாமலும் இருக்கும் என்கிறார் அவர்.

முகக்கவசங்களைக் கையாளும்போது கவனக்குறைவாக இருந்தால் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு இல்லாமல் போகும். குறிப்பாக துப்புரவுப் பணியாளர்களுக்கு இந்நிலைமை ஏற்படலாம். அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என்பதால் உபயோகித்த முகக்கவசங்களை சோப்பு நீரில் துவைத்தபின் குப்பையில் போடுவது பாதுகாப்பானது என்பதும்  ஏற்கக்கூடிய யோசனையாகவே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here