லாக்டவுனால் மன அழுத்தம்.. பிரபல இளம் டிவி நடிகை, தூக்குப் போட்டுத் தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல இளம் டிவி நடிகை, தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பிரபல இந்தி சின்னத்திரை நடிகை பிரேக்‌ஷா மேத்தா. வயது 25.

இவர் மேரி துர்கா, லால் இஷ்க் உட்பட சில இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

புகழ்பெற்ற கிரைம் பேட்ரோல் என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதில் இவரது நடிப்பு பேசப்பட்டது.

இரண்டு மாதம் மும்பையில் தங்கி தொடர்களில் நடித்து வந்த இவர், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். கொரோனா லாக்டவுன் காரணமாக, சினிமா மற்றும் சின்னத்திரைப் படப்பிடிப்புகள் ரத்துச் செய்யப்பட்டதால், தனது சொந்த ஊரான இந்தூருக்கு அவர் சென்றிருந்தார்.

கடந்த இரண்டு மாதத்துக்கு மேல் அங்குதான் இருந்தார்.  படப்பிடிப்புகள் நடைபெறாததால் வருமானம் இல்லை. இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தாராம்.

கொரோனா காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த அவர், வழக்கம் போல கடந்த திங்கட்கிழமை இரவும் தூங்குவதற்குச் சென்றார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர், அறையில் இருந்து வெளியே வராததால், குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவரது தந்தை கதவைத் திறந்து பார்த்தார்.

அப்போது அவர் மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அவரை உடலை இறக்கி அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தனது தற்கொலைக்கு முன்பு, கடைசியாக தனது சமூக வலைத்தளத்தில் இந்தியில் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார்.

அதில், ‘கனவுகள் மரணிப்பது மிக மோசமான விஷயம்’ என்று குறிப்பிட்டுள்ளார். போலீசார் இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம் சின்னத்திரை நடிகை ஒருவர், திடீரென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது டிவி நடிகர், நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து சின்னத்திரை நடிகர், நடிகைகள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தி சினிமா மற்றும் டி.வி, நடிகர், நடிகைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதார பிரச்னை காரணமாக டி.வி. நடிகர் மன்மீத் கிரேவால் தற்கொலை செய்திருந்தார். கவுன்சிலிங் அதற்கு முன் பிரபல சின்னத்திரை நடிகர் சச்சின் குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருந்தார். கிரைம் பேட்ரல் தொடர் உட்பட பல்வேறு தொடர்களில் நடித்த ஷபிக் அன்சாரி புற்று நோய் காரணமாக மரணமடைந்திருந்தார். இப்போது இவரும் மரணமடைந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர், நடிகைகளுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here