அவர்களும் மனிதர்களே!

அந்நியத் தொழிலாளர்களை அமர்த்தும்போதே அவர்களுக்கான முறையான தங்குமிடம் கொடுக்கப்படவேண்டும் என்பது தெரிந்தும் அவர்களைக் கைவிடும் நிலையில்தான் நிறுவனங்கள் இருக்கின்றன என்பது அலட்சியம். அக்கறையினமை. அவர்களும் மனிதர்களே என்பதைச் சொல்லித்தான் புரிய வேண்டுமென்பதில்லை.

நிறுவனங்கள், மனித ஆற்றல் துறையின் அடிப்படைக்கொள்கைகள் பற்றித் தெரிந்திருந்தாலும்  அதுபற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை என்பது சரியான கொள்கையல்ல. மலேசிய நிறுவனங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும்போதே  அவர்களுக்கான தங்குகுமிட வசதி முறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பெரும்பான்மை நிறுவனங்கள் வேலை கொடுக்கின்றன. ஆனால், தங்குமிடம் வழங்கப்படுவதில்லை. அவர்கள், அல்லது அவர்களின் குடும்பம் எங்கோ புறம்போக்கு இடத்தில் குடிசைப்போட்டுக்கொள்கின்றன. அது கூடத்தெரியாமல் அமலாக்க அதிகாரிகள் இருக்கின்றனர்.

இன்றைய கொரோனா தொற்று காலத்தில் அந்நியர்களே இலக்காக இருக்கிறார்கள். அந்நியர்களால்தான் தொற்று அதிகமாக பரவுகிறது என்கிறார்கள். இதுதான் சுகாதார முடிவாகவும் இருக்கிறது.

அப்படியிருக்க, அந்நியர்களுக்கான குடியிருப்பு, அல்லது தங்குமிடம் முறையானதாகவும்  சுகாதாரப் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்பது மனித ஆற்றல்துறையின் முடிவாகும்.

ஆந்நியத் தொழிலாளர்களின் தங்குமிடம் என்பது நிறுவனங்களின் கடமையாகும். இனியும் காலம் தாழ்த்த முடியாது. அந்நியத் தொழிலாளர்களின் தேவை அவசியஆனது என்றால் அதற்கான் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கான சுகாதாரம் முதல் இடத்தில் வைக்கப்படவேண்டும் என்பதில் ஆழ்ந்த கவனம் செலுத்துகிறது அரசு.

அதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 31 ஆம் நாளுக்குள் அந்நியர்களுக்கான தங்குமிட வசதி தகுந்த சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் கடுமையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here