உடல் வெப்ப கருவிகளின் ஊனம்

உடல் வெப்பக் கருவியால்  உடல்வெப்பம் அளக்கும்முறை கையாளப்படுகிறது. பல வணிக இடங்கள், உணவகங்கள். பொருட்கள் வாங்கும் இடங்களில் இக்கருவிகள் இருக்கின்றன. உடல் வெப்ப அளவு பதிவும் செய்யப்படுகின்றன.

இதில் வேடிக்கை என்னவென்றால் உடல் வெப்ப அளவு கருவியின் பதிவு சரியான பதிவைக் காட்டவில்லை என்பதுதான். வெப்ப நிலை வழக்கமாக 3.7 வரை இருக்கும். குளிர் சாதன வசதிக்குப்பின் இந்தபதிவு  சற்று மாறுபடலாம். உடல் வெப்பம் என்பது 29.0 க்குப்போய் மீண்டும் 37.0 க்கு வருமா என்பதில் குழப்பம இருப்பதாக மருத்துவர் ஒருவர் கூறியிருக்கிறார்.

இவர் ஓர் உணவகத்திற்குச் சென்றபோது இவரின் உடல் வெப்ப சோதனை 29.0 என இருந்ததாக அவர் கூறியிருக்கிறார். இது நிச்சயமாக சரியான பதிவாக இருக்க முடியாது. சரியான பதிவைக்  காட்டாத ஒரு கருவியால் பயன் விளையப் போவதில்லை. கூடுதலான பதிவைக் காட்டினால் அவர்களின் என்ன முடிவு என்னவாக இருக்கும்?

உடல் வெப்பக் கருவியால் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை. பல கருவிகள் முறையான வெப்பத்தைப் பதிவு செய்யும் திறனற்றவையாகவே காணப்படுக்கின்றன. இதற்குப் பதிலாக மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணையைப் பின்பற்றினால் மட்டுமே போதுமானதாக இருக்கும்.

கடமைக்காக ஒன்றைச்செய்யும் போது அதன் பின் விளைவுகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்கிறார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here