பன்முகக் கலைஞர் டெனிஸ் குமார் பினாஸ் வாரிய உறுப்பினராக நியமனம்

மலேசிய தமிழ்த் திரைப்படத்துறை அதிக வசூல் சாதனைப் படைத்த நடிகர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராக முத்திரை பதித்த டெனிஸ் குமார் தேசிய திரைப்பட சம்மேளனமான பினாஸ் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பினாஸ் வாரியத்தின் புதிய தலைவர் சக்காரிய அப்துல் ஹாமிட் தலைமையிலான வாரியத்தில் டெனிஸ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடன கலைஞராகவும் நடன ஆசிரியராகவும் கலைப்பயணத்தைத் தொடங்கிய டெனிஸ் குமார், நிகழ்ச்சிகள் வழிநடத்துனர், அறிவிப்பாளர், திரைப்பட விநியோகிப்பாளர் கலைத்துறையிலேயே தனது பயணத்தை தொடந்தவர்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல விருதுகளைப் பெற்றுள்ள டெனிஸ் குமார், இந்த நியமனத்தின் வழி மலேசியத் தமிழ் திரைப்படத் துறைக்கு புது உத்வேகத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்.

மலேசியத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பத்து இலட்சம் வெள்ளிக்கு மேல் வசூல் சாதனைப் படைத்தவர். தனது அனுபங்களின் அடிப்படையில் மலேசியத் தமிழ்த் திரைப்படத் துறை வளர்ச்சிக்கு தனது அனுபங்களின் அடிப்படியில் முன்னெடுப்புகளை மேற்கொள்வார் என நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here