வீழ்ச்சியை நோக்கி பாலர்ப் பள்ளிகள்

பாலர்ப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது ஆர்வமிக்க செயலாகத் தாய்மார்களுக்கு இருந்தது. அந்த ஆர்வம் இப்போது இல்லை என்றாகிவருகிறது.

பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குப் பயம் இருக்காது. அவர்கள் ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும்போது மற்ற மாணவர்களோடு எளிதாக பழகுவார்கள் என்பதால்தான் பாலர்ப் பள்ளி சிறந்த தேர்வாக இருந்தது.

இன்றைய நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. பள்ளிக்கூடங்கள் இன்னும் திறந்த பாடில்லை. திறப்பதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்றன. கூடல் இடைவெளி காரணமாக செயல்படுத்த முடியவில்லை. செயலுக்கு வருகின்ற நாள் இன்னும் அறிவிக்கப்படாமலேயே இருக்கிறது.

இந்த நிலையில் பாலர்ப் பள்ளிகளே சிக்கலில் இருப்பதாக பாலர்ப்பள்ளிகளின் ஆசிரியர் சங்கத்தலைவரான சால்லி இங் கூறுகிறார்.

பாலர்ப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்ககளுக்கு 1,200 வெள்ளி சம்பளம் கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கு குழந்தைகளின் பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் கட்டணத்தின் அடிப்படையைக் கொண்டே சம்பளம் தரப்படுகிறது.

இவர்களுக்கு வேறு வருமானம் இல்லை. அண்மைய உதவிகள் தொடர்ந்து கிடைக்குமா என்பதில் உறுதியில்லை. இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்களில்  பாலர்ப்பள்ளிகள் பல மூடப்படலாம் என்றும் கூறப்படுவதால், பாலர்ப் பள்ளி ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது.

பல பெற்றோர்களும் வேலையிழப்பை எதிர்கொள்ள நேரும் என்பதால் பாலர்ப்பள்ளிக்கு பிள்ளிகளை அனுப்ப முடியாமலும் போகலாம். இருந்தும் 70 விழுக்காட்டு பெற்றோர்கள் பாலர்ப் பள்ளியை வாழவைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது எத்தனை காலத்திற்கு நீடிக்கும்?

மாற்று வழிகள் இருந்தால்தான் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது ஆராயப்படும் என்கிறார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here