உயர்வும் தாழ்வும் உணர்வின் எச்சம்

உயர்வே சிறந்தது என்பார்கள். அனைத்திலும் உயர்வு காணவேண்டும் என்றும் அடம் பிடிப்பார்கள். இதுவும் நியாயம்தான் என்று சொல்லிவிடவும் முடியாது. துன்பத்தில் உயர்வு தேவை என்று சொன்னால் ஏற்புடையதா? நிச்சயமாக ஏற்கமாட்டார்கள். அதுபோல, தீயவற்றில் உயர்வு என்றால் மனம் ஏற்குமா? நிச்சயமாக முடியாது.

உயர்வு என்ற சொல் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். அந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போதே ஓர் உயரிய எண்ணம் உற்பத்தியாகும். ஆனால், அந்தச்சொல்லுக்குரிய சிறந்தவற்றைத்தேர்வு செய்யும்போதுதான் அந்தச்சொல் உயர்வானதாகத்தெரியும்.

அதேபோல்தான் தாழ்வு என்ற சொல்லும் உயர் பண்பைக் காட்டுவதாகவே இருப்பதை உணரமுடியும். அச்சொல்லைப் பயன்படுத்தும் இடத்தைப்பொருத்தே தாழ்வு என்ற சொல் உயர்வாக மாறும்.

இப்போது, நமக்குத்தேவை தாழ்வு என்பதுதான். உயர்வை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு தாழ்வுக்குத் தஞ்சம் கொடுக்க வேண்டிய காலத்தில் மக்கள் இருக்கிறார்கள். மக்கள் அனைவரும் தாழ்வுக்கு உயர் மரியாதைச் செலுத்தும் காலத்தில் இருக்கிறார்களென்பதை நம்பித்தான் ஆகவேண்டும்.

உலக நாடுகளில், அவரவர் மொழிகளில் தாழ்வு என்பது வேதமாகிவிட்டது. மக்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் கோவிட் -19 தாழ்வு நிலையை அடைந்தால்தான் உயர்வு எனும் சொல்லுக்கே உயிர்வரும்.

இதுவரை உயர்வு எனும் சொல்லுக்கு தலைக்கனம் அதிகமாகத்தான் இருந்தது. இருந்தும் வருகிறது. கோவிட் -19 வந்தபிறகுதான் அச்சொல்லின் தலைக்கனம் குறைந்து, தாழ்வின் பக்கத்தில் இடம் கேட்கிறது. நட்பு பாராட்ட முனைகிறது. தாழ்வுக்கு மன்னிக்கும் தகுதி உண்டு.

தாழ்வு என்ற சொல் உயர்வு என்ற சொல்லால் தாழ்ந்திருக்கலாம். உயர்வு என்ற சொல் உயர்வாகப் பேசப்படுவதற்கு தாழ்வு என்ற சொல்தான் காரணம் என்பதை உயர்வு மறந்துவிட்டது. தாழ்வு  என்ற சொல்லில் ழ கரம் இருக்கிறது. தாழ்வு என்ற சொல்லே கொரொனாவைத் தாழ்த்தி  உயிர்ப்பித்தும் கொடுத்திருக்கிறது. இப்போது, கொரோனா உயர்வாக மதிக்கப்படுமானால் உயிர் விலையாகிவிடும். கொரோனா தாழவேண்டும். கொரோனா தாழ்ந்தால் தான் உயர்வுக்கு மரியாதை வந்து சேரும்.

கொரோனா உயர்ந்துவிடாமல் இருக்க தாழ்வுக்கு உரிய மரியாதை வழங்கப்படவேண்டும் என்பதை மக்கள் உணரவேண்டும். உணர்ந்துவருகிறார்க்ள். கொரோனா தாழ்ந்து தாழந்து தாழ்வு நிலைக்குப் போனால்தன் மலேசியம் உயர்வாகப்போற்றப்படும்.

புதிய செய்தியில் 10 பேர் மட்டுமே தோற்றில் பாதிபாக இருப்பதாகதெரிய வருகிறது. இது தாழ்வின் உயர்வு. இந்தத்தாழ்வு இன்னும் ஒற்றை எண்ணுக்கு வரவேண்டும். அப்போதுதான் முன்னணிப் பணியாளர்களின் மதிப்பு உயர்வாகத்தெரியும். அதற்கு ஒரே வழி தாழ்வு மனப்பான்மை இல்லாத தாழ்வு வேண்டும். கொரோனாவைத் தாழ்த்தி வீழ்த்தினால் உயர்வு உயர்வாகத்தெரியும்.

தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்வானவர்கள்  மதிக்காதுபோனால் எது உயர்வென்றும் தெரியாமல் போய்விடும்.

தாழ்ந்து கிடக்கும் குளத்து நீருக்குத் தேங்கிய நீர் என்று பெயராக இருக்கலாம். தாமரை எனும் தெய்வமலர் உயர்திருக்க, தாழ்ந்திருக்கும் நீர்தான் காரணம் என்பது உயர்வுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனால், தாழ்ந்திருக்குத் தகுதியில்லை என்றா அர்த்தம். அடக்கம் என்பதன் அர்த்தமே வேறு. ஆதாலால் தாழ்வு உயர்வானது என்று கருதினால் உயர்வு உயர்வாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here