பாட்டும் நானே பாவமும் நானே!

பாட்டும் நானே பாவமும் நானே என்பது பாடல் வரிகள். ஒவ்வொரு முறையும் பாடலைப் பாடிப்பார்த்தால் அதன் அர்த்தம் மாறிக்கொண்டே இருக்கும். அந்தப் பாடலை இம்முறை பாடியபோது கிள்ளானில் குவிந்துகிடக்கும் அந்நியர்கள் என்ற செய்தியின் அர்த்தம்  தீயாக பற்றிக்கொண்டிருக்கிறது.

கிள்ளானில் அந்நியர்கள்  என்பது செய்தியா? அந்நியர்களுக்குக் கூடாக மாறிவிட்டது கிள்ளான் என்பதும் உண்மைதான். இங்கு அந்நியர்கள் குவிந்துகிடக்க என்ன காரணம்? வந்தாரை வாழவைத்த தமிழகம் பட்ட பாடும், பட்டுக்கொண்டிருக்கும் அவதியும் பெருங்கதை. இதைக்கொண்டு ஆறாவது காப்பியம் எழுதினாலும் தகும்.

அங்கே உரிமையுள்ளவர்களுக்குத் தகுதியில்லை. தகுதியுள்ளவர்களுக்கு உரிமையில்லை. இப்படித்தான் பேசப்படுகிறது. இதுதான் உண்மை. இங்கு அதுதான் நடக்கிறது.

மலேசியாவின் கிள்ளானில் என்னதான் நடக்கிறது? இப்போதுதான் சின்னதாய் கதை வெடித்திருக்கிறது.

மலேசிய மக்களிடம், குறிப்பாக மலேசிய முதலாளித்துவத்தில் பெரிய குறை இருக்கிறது. அக்குறைக்கு மூலகாரணம் மலேசியத்தொழிலாளர்கள் என்பதும் தப்பில்லை. இதற்குக் காரணங்கள் இருக்குக்கின்றன.

மலேசியத் தொழில்களில் மலேசியர்கள் இணைக்கப்படுவதில்லை. வந்தேறிகளுக்கு வக்கணையாக அடைக்கலம் கொடுத்ததின் விளைவால், அந்நியர்கள் ஆதிக்கம் ஆர்ப்பாட்டமாக மாறிவிட்டது. அதனால் உள்ளூர்வாசிகள் ஒடுக்கப்படுகின்றனர். வந்தேறிகள் மட்டுமே வேண்டும் என்ற கொள்கைத் தீவிரத்தால் உள்ளூர்வாசிகள் ஓரம்கட்டப்பட்டும் வருகின்றனர்.

கெட்டும் பட்டணம்சேர் என்பது பழமொழி. அதைப் புரிந்துகொண்டவர்கள் குடியேறிகள். தெரிந்த தொழில்களோடு கடைகளிலும் தொழிற்பேட்டைகளிலும் குடியேறினார்கள். தொழிலாளர் சட்டம் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படாமல் வேலைசெய்தார்கள், வேலைவாங்கப்பட்டனர். அவர்களுக்குப் பாதுகாப்பபுக் கேடயமாக இருந்தவர்கள் உள்ளூர்வாசிகள். அவர்களிடமிருந்து கப்பம் பெற்று சுகமாக வாழ்க்கை நடத்தினார்கள்.

உள்ளூர்க்காரர்கள் இதற்கு இடையூறாக இருந்ததால் தாக்கப்பட்டனர் என்று செய்தியும் இருக்கிறது.

மலேசியர்களுக்குத் தொழில்திறன் போதவில்லை என்பதும் உண்மை.  போதவில்லை என்பதால் நாட்டமில்லை. நாட்டமில்லை என்பதால் மலேசியர்களுக்குப் பதிலாகக் குடியேறிகள் ஆக்கிரமித்தனர் இந்த ஆக்கிரமிப்பு ஒரு தொடர்கதையாகிவிட்டது இதுவே வழக்கமாகிவிட்டது.

அந்தத் தொடர்கதையின் புதிய அத்தியாயத்தை கோரோனா எழுதிக்கொண்டிருக்கிறது. இதனால், மலேசியர்களின் கதா பாத்திரங்களுக்கு இப்போது வசனம் எழுதப்பட்டுவருவதாக கிள்ளானில் இருந்து செய்தி வெளியாகியிருக்கிறது.

இனி, கள்ளக்குடியேறிகளின் மவுசு குறைந்திவிடும் என்று எதிர்ப்பார்க்கலாமா? நிச்சமாகத் தெரியவில்லை. எவ்வித குடிநுழைவுப் பத்திரங்களும் இல்லாதவர்களாக, சுதந்திரமாகச் சுற்றித்திரிகிறார்கள் அவர்கள். இலவச பேருந்தும் அவர்களுக்காகவே சேவையில் இருந்தது.

கொரோனா அவர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. குடிநுழைவுத்துறைக்கான நேரம் இது. அவர்களை இழுத்துச்செல்லும் நேரமும் இதுதான்.

இனியாவது மலேசிய முதலாளித்துவம் மலேசியர்களுக்காக மாறுமா? மலேசியர்கள் தகுதியானவர்கள். அவர்களிக்குரிய பயிற்சிகள் இல்லை. ஆனாலும் முடியும் என்பதை செலாயாங் பாரு  உணர்த்தியிருக்கிறது.

கள்ளக்குடியேறிகள் வேண்டாம் என்ற முடிவுக்கு சிறுதொழில் முதலாளிகள் வரவேண்டும். பயிற்சிகள் கொடுக்கப்படவேண்டும். கள்ளக் குடியேறிகளால்தான் கொரோனா இன்னும் வாழ்கிறது. கொரோனா ஒழிக்கப்படவேண்டுமானால் பத்திரங்கள் இல்லாதவர்கள் பத்திரமாக வெளியேற்றப்படவேண்டும். அப்படிச்செய்தால் கிள்ளான் மட்டுமல்ல . அனைத்து ஊர்களிலும் சாலைகள் சுத்தமாகிவிடும். மலேசியக் கொடி உச்சத்தில் பறக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here