மலேசிய அரசியலில் மகாதீர்தான் இன்னமும் மையப்புள்ளியா?

மலேசிய அரசியல் பல்வேறான மாற்றங்களை அவ்வப்போது சந்தித்து வருகிறது. கொரேனா வைரஸ் காலத்திலும் மலேசிய அரசியலில் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த மாற்றங்களுக்கு மையப்புள்ளியாக துன் டாக்டர் மகாதீர் இருந்து வருகிறார் என்பதை மலேசியர்கள் மட்டுமின்றி உலக மக்களும் இந்நேரம் கவனிக்கத் தொடங்கியிருப்பார்கள்.

மகாதீர் உட்பட மேலும் நால்வரை பெர்சத்து கட்சியை விட்டு நீக்கியிருப்பதாக பெர்சத்து மேலிடம் அறிவித்துள்ள நிலையில் அதிரடி பாய்ச்சலாக பெர்சத்து தலைமையகத்திற்கே போயிருக்கிறார் துன் மகாதீர்,

நடப்பு அரசியலை ஆட்டுவிக்கத் தகுதியானவன் நானே என அவர் நாற்காலியையும் கைப்பற்றியிருக்கிறார். இந்தக் கைப்பற்றலைத் தொடர்ந்து நடப்பு அரசியல் சூடு பிடிக்கும். பெர்சத்து கட்சியை முன்னிட்டுதான் மலேசிய அரசியல் இயங்குகிறது என்பதால் ஒரு புதிய தேசிய அலையும் உருவாகியிருப்பதை மறுக்க முடியாது.

அன்வாருக்கு இடுக்களித்து அரசியல் நடத்திய மகாதீர் தற்போது முகிடின் யாசினுக்கு எதிரான அரசியல் மண்வெட்டியைத் தூக்கியிருக்கிறார். அரசியல் விவசாயக் களத்தில் கொத்துவதற்கு ஏற்றவன் நானே என்பதை மீண்டும் நிருபிக்க இவர் எடுத்திருக்கும் புதிய அவதாரம்தான் இந்த நாற்காலி கைப்பற்றல் பிரவேகம்.

இம்முறை மகாதீரின் சாணக்கியம் பலிக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காரணம்…மகாதீரின் அரசியல் சாணக்கியத்தனத்திற்குள் அவ்வப்போது சறுக்கு விளையாட்டும் அந்த சறுக்கு விளையாட்டில் அவர் சறுக்கி விழுவதும் புதிய விவகாரமல்லவே!  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here