குடிபோதை செய்திகள் கூத்தடிக்க ஆரம்பபித்துவிட்டன. இனி, அதுதான் பேச்சாக இருக்கும். அதைப் பேசாமல் சில தரப்புக்குப் பொழுதே போகாது என்று ஆகிவிட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் தண்டனை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதைத்தான் அரசும் பல்லவி பாடி சரணத்திற்கும் வந்துவிட்டது.
இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டாதே என்பதைக் காட்டிலும் குடிபோதையில் வாகனம் ஓட்டாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை யோசித்தால், இறந்தவர்களின் சாவுக்கு தீர்வாகவும் இருக்கும். அத்மா சந்தியடையும்.
என்ன செய்யலாம் எனபதற்கான உருப்படியான யோசனையை யாரும் கூறியதாகத் தெரியவில்லை.
ஜப்பானில் இதற்கான நடைமுறை ஒன்று இருந்தது. அதாவது குடிப்பவர்கள் தனியாக குடித்துவிட்டு காரை இயக்கினால் கார் இயங்காது. என்ன முட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது. போதை குறையும் வரை கார் இயங்காமலேயே இருக்குமாம்.
அந்த நேரத்தில் பார் நிர்வாகிகள் மூலம் அறை எடுத்துக்கொண்டு உறங்குவதைத்தவிர வேறு வழியில்லை. விடிந்தபின்தான் செல்லவேண்டும் அல்லது போதை தெளிய வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது வழியைப்பின் பற்றினால் விபத்திலிருந்து தப்பலாம்.
மலேசிய நாட்டில் குடிக்கும் வசதி இருக்கிறது. குடித்துவிட்டு காரை இயக்கிச் செல்லவும் முடியும். வம்பில் மாட்டிக்கொள்ளவும் முடியும். எதிர்படுகின்றவரின் உயிரைப் பறிக்கவும் முடியும்.
இதற்கு, வாகனம் செலுத்தும் புரிதலுக்கு மாற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மலேசிய போக்குவரத்துத்துறை புரிதல் பாடத்தை நடத்தும் திட்டத்தை உருவாக்க வேண்டும். ஐந்தண்டுகளுக்கு ஒருமுறை இது அமையலாம். பார்வையின் தூரம், ஓட்டும்முறை, அவசர நிறுத்தம் என்றெல்லாம் இப்பயிற்சியில் இருப்பது நல்லது.
அதோடு போதையினால் ஏற்படும் இடர்பாடுகள் மருத்துவப் பரிசோதனை என்றெல்லாம் இருக்கலாம்.
பயிற்சி என்பது மனத்தில் ஒரு பதிவை ஏற்படுத்தும். சிலகாலத்திற்கு அது நீடிக்கும். இதனால் விபத்து ஏற்படாது என்பது உத்தரவாதமல்ல. விபத்துகளைக் குறைக்க உதவும்
மேலும், மதுவிற்பனை நேரம் என்றெல்லாம் மற்ற நடவடிக்களாக இருக்க வேண்டும். ஜப்பானைப்போல் கார்களில் கருவிகள் பொருத்தப்படுமானால் அதை அனுமதியின்றி மாற்றியமக்கவும் கூடாது என்றிருக்குமாறு பாதுகாப்பு பரிசோதனைகள் சாலைத்தடுப்புகளில் செய்யப்படவேண்டும்.