ஆலயங்கள் திறக்கப்படுவது அவசியமா?

ஆலயங்கள் திறக்கப்படுவது அவசியமா என்று கேட்பது சுலபம். திறக்கப்படுவதால் தீமைகள் விளைவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்வதற்கும் இந்து மக்களுக்கு அருகதை உண்டு.

ஜூன் 9 ஆம் நாள்  வரை அவகாசம் இருக்கிறது என்பதும் அறியப்பட்ட செய்திதான். ஆனாலும் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணை நீட்டிக்கப்படலாம் என்ற அச்சமும் இருக்கிறது. இது அவசரமல்ல . இந்து மக்களின் அவசியம் கருதியதாகும்.

நாட்டின் நலம் கருதி இந்து ஆலயங்கள் கட்டுப்பாடை அனுசரித்து வந்தன என்பதும் கருத்தில் கொள்ளவேண்டும். மக்கள், ஆலயங்களுக்குச் செல்ல ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதற்கு வாய்ப்பளிக்கும்படி கேட்டுக் கொள்வதாக பினாங்கு மாநில ஆலயத்தலைவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

பேரங்காடிகளுக்கும் வணிகத்தளங்களுக்கும் செல்வோரை விட ஆலயங்களுக்குச் செல்வோர் சுத்தமாகவும் சுகாதாரமும் இருப்பது வெறும் கதையல்ல. ஆலயங்களின் நறுமன வாடை உள்ளத்துக்கு இதமானவை. ஆலயங்களுக்கு வருவோர்களிடம் நாட்டின் நிலைமைகளை எடுத்துரைக்க விற்பனைத் தளங்களை விட ஆலயங்கக்கு வாய்ப்புகள் அதிகம். இறைபறிய வர்ர்த்தைகளை பிள்லைகலூம் செவிமடுப்பார்கள்.

இஸ்லாமியர்களுக்கு தொழுகைக்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். கிரிஸ்தவர்கள் அவர்களாகவே  முன் வந்து திறப்பு இல்லை அறிவித்திருக்கிறார்கள். ஆனாலும்  இந்து ஆலயங்களுக்கு வாய்ப்பு  வழங்கலாம். பாதுகாப்பு  அனுசரிக்கபடும். கட்டுப்பாட்டினை அனுசரித்து நடந்துகொள்ள ஆலயப்பொறுப்பாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள். நமிபிக்கையான பதிலுக்காக ஆலயங்களின் பொறுப்பாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருப்பதாக பினாங்கு மாநில இந்து சங்கத்தலைவர்  எம். முனியாண்டி தெரிவித்தார்.

ஆலயங்கள் திறக்கப்டாமல் இருப்பதால் மக்களின் கேள்விக் கணைகள் அதிகரித்துவிட்டன. மக்களின் நன்மை கருதி ஆலயங்களை கூட்டமில்லாத வழபாட்டுக்குத் திறக்க அனுமதி தருமாறு தென் செபராங் பிறை அருள்மிகு மீனாட்சி அம்மன் ஆலய தேவஸ்தானம் தலைவர்  மு.வ.கலைமணி பக்கிரி, அல்மா ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான் தலைவர்  மாரிமுத்து முத்துக்கிருஷ்ணன், புக்கிட் மெர்தாஜம் நாச்சியப்பன், பத்து பெரிங்கி பத்ர காளியம்மன் ஆலயத்தலைவர் சுகுமாரன் அப்பு ஆலயத்திறப்பு கோரிக்கையை பினங்கு மாநில இந்து சங்கத்தலைவரிடம் வைத்திருப்பதாக் எம் ,முனியாண்டி.

இது குறித்து பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி பரிசீலிக்க வேண்டும் என்றும் இக்குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

இந்து ஆலயங்கள் விறபனைத்தளங்களை விட கூடுதல் பாதுகப்பானவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here