மாடென்ன செய்தது உனக்கு?

மாடென்ன செய்தது உனக்கு, தீங்குகள் செய்வது எதற்கு

நீயென்ன செய்தாய் அதற்கு, என்று நினைத்தால் நன்மை உனக்கு!

இப்படித்தான் பாடவேண்டும் போல் இருக்கிறது. நினைபவர்கள் யார்?

கால்நடைகள் மனித வாழ்க்கையோடு ஒன்றிணைந்துவிட்ட ஓர் உயிர். உயர்திணை வர்க்கத்தோடு குடும்பமாய் சேர்ந்தே வாழ்கிறது. ஒரு குடும்பத்தின் இரண்டாம் தாய் என்றுதான் பசு போற்றப்படுகிறது.

இன்றைய உலகம் தாய்ப்பாலை நம்பியில்லை. பசுப்பலைத்தான் நம்பியிருக்கிறது என்பதற்கு எந்தச்சான்றுகளும் தேவையில்லை.

பாதிப்புள்ளே பொறக்குதுடா பசுப்பாலை நம்பி  என்ற பாடல் வரிகளில் இந்த உண்மை பதிந்திருக்கிறது. பிள்ளைகளின் பசிக்கு பசுப்பால் தான் தாய்ப்பாலின் இடத்தை நிறைவு செய்வதாய்  இன்றுவரை இருக்கிறது.

பசு, தாயின் இடத்தில் இருப்பதால், அது இந்திய இனத்தின் இறையாகப் போற்றப்படுகிறது. பொங்கல் தினத்தில் அதற்கென சிறப்பு நாளும் அமைந்திருக்கிறது.

மனித வர்க்கத்திற்கு உறுதுணையாய் இருக்கும் கால்நடைகளை அழிப்பதே குறிக்கோளாகக்கொண்டிருக்கும் கூட்டம் கைதட்டலுடன் கிளம்பியிருக்கிறது. இப்படியெல்லாம் செய்வது யார்? தனி நபரா? அல்லது குழுவா? தனியார் துறையா? அல்லது செம்பனைத்தோட்ட நிர்வாகமா?

அண்மைய பார்வை செம்பனைத்தோட்டம், அதன் நிர்வாகம்  மீது ஆழமாய் பதிந்திருக்கிறது,. இது உண்மையல்ல என்று ஒதுக்கிவிடவும் முடியாது.

அண்மைய காலமாக போர்ட்டிக்சன் பகுதியில் இப்படியெல்லாம் தொல்லைகள் கொடுக்கப்பட்ட செய்திகள் இருந்தன. இதே போன்று காப்பார் ஜெரம் பகுதியிலும் பல கால்நடைகள் ஓடை நீர் குடித்து மாய்ந்தன. ஓடை நீரில் விஷம் கலக்கபட்டிருந்தது அறியப்பட்டது. இதைத் திட்டமிட்ட செயல் என்று கால்நடைகள் வளர்ப்போர் போர்க்கொடி உயர்த்தினர்.

செம்பனைத் தோட்டங்களில் கால்நடைகள் மேயக்கூடாது என்று தோட்ட நிர்வாகம் கூறியிருந்ததே இதற்கான அடிப்படைக் காரணம் என்ற சந்தேகத்தை கால்நடைகள் வளர்ப்போர் சந்தேகத்தைக் கிளப்பினர்.

துப்பறியும் சினிமா கதை போல், நீரோடையில் கொலை யுக்தி உதித்திருக்கிறது.  மேய்ச்சலுக்குப் பின் நீரோடை நீரைத்தான் கால்நடைகள் பருகும். இதில் விஷம் கலப்பதில் எந்த சிக்கலும் இல்லை. வராது. இப்படித்தான் கால்நடைகள் பல மடிந்தன.

விஷ நீரை அருந்திய கால்நடைகள் மடிந்தன என்பது செய்தி மட்டும்தான் எந்த நடவடிக்கைகளும் எடுபடவில்லை. போலீஸ் புகார்கள் பொய்த்துவிட்டன. கால்நடை வளர்ப்போர் கவலை பட்டதோடு சரி.

தோட்ட நிர்வாகம் வெற்றிக் களிப்பில் மிதந்தனர். தோட்ட முதலாளிகள் உயர்ந்த மனிதர்கள் என்பதால் அவர்களின் பூட்டு விலை மதிப்புள்ளதாக இருந்தது. பலரை வாய்திறக்காமல் பூட்டிவிட்டதாகச்செய்தி. அவர்களிடம் கால்நடைவளர்ப்போர் போட்டியிடமுடியாமல் போனது.

இழப்பு எப்போதுமே ஏழைகள் பக்கம்தான் என்பது எந்த சந்தேகமுமில்லை. இது பழைய கதையின் இரண்டாம் பாகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here