பேச்செல்லாம் பேச்சல்ல!

கடந்த மூன்று மாதங்கள் பெரும் அவதியில் இருந்தவர்களுக்கு மேலும் ஒரு சிரமம் காத்திருக்கிறது. ஆனாலும் சாதகமான செய்தியும் கூடவே வந்து கைகுலுக்கிக் கொள்ளும்போது மனம் நிம்மதியடைந்திருக்கிறது.

குறிப்பாக, அரசு அறிவிக்கும் எந்த திட்டமும் அத்துணை விரைவில் கடைப்பிடிக்கப்பபடுவதாக இருக்காது. உதாரணத்திற்கு அடகுக் கடைகள். வங்கி வட்டிகள், செலுத்தும் தவணைக்காலம் போன்றவற்றில் மக்கள் திருப்தியடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அரசு திட்டங்கள் மதிக்கப்படவில்லை என்பதே விரைவான பதிலாக இருக்கிறது.

வெறும் அறிவிப்பு மட்டுமே என்பது அலட்சியமாகவே பேசப்படுகிறது. அலட்சியங்களோடுதான் மக்கள் வாழப் பழகிக்கொண்டிருக்கிறார்கள். இது வழக்கமாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த மார்ச் மாதம்முதல் மனம் இறுக்கமாகவே இருந்த மக்கள், இன்னும் அதிலிருந்து மீளவில்லை என்பதை ஆய்வுகள் கூறுகின்றன. ஆனாலும் மன இறுக்கத்தோடு மக்கள் நகரத்தொடங்கிவிட்டனர். இதில் பழைய நிலைமை இல்லை. அந்த வேகம் இல்லை உற்சாகம் இல்லை.

மன அழுத்தத்தின் சாயல் அதில் தெரிகிறது. வேலை இழப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கவலையின் அச்சமாகவும் அது இருக்கலாம். இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ முடியும் என்பதில்லை. ஆனாலும் சிறப்புடன் காலத்தை நகர்த்த முயன்றதன் தடம் உணரப்படுக்கிறது.

இப்போதிருக்கும் ஒரே கவலை. கடன் செலுத்துவதுதான். கார் கடன். வங்கிக்கடன், வட்டி, அடகுக்கடை வட்டி.  இவற்றிலும் கூடுதலாக மின்சார கட்டணம் தெரிகிறது.

மின்சாரக்கட்டணம் சிறியதாக இருந்தபோதே கட்டமுடியாமல் போனவர்கள் அதிகம். கடந்த மூன்று மாதத்தில் இதன் தொகை மும்மடங்காக அதிகரித்துவிட்டது, இதைச்செலுத்த தவணைமுறை உதவும். செலுத்திமுடிக்க, எத்தனை காலத்திற்குள் செலுத்தப்படவேண்டும் என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது. இதோடு, நடப்பு பில்களும் கட்டப்படவேண்டும் என்பது கூடுதல் சுமை.

மின்சாரம் துண்டிப்பு என்று வரும்போது இன்னும் கூடுதலான சுமை முதுகில் ஏற்றப்படும். அப்போது இருட்டில் இருக்கும் குடும்பங்கள் அதிகமாகிவிடும். எப்போதுமே அறிவிப்பு அறிவிப்பாக மட்டுமே இருக்கும். நடைமுறை தலைவணங்காது என்பதே பேச்சு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here