உண்மை அறிந்து உரைப்பது நல்லது

கருத்து முரண்பாடுகள் என்று வரும்போது அது பொய்யானது என்றாகிவிடுகிறது. இப்படி நடப்பது கோவிட் காலத்தில் மிக அதிகமாகவே இருந்தன. தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்கள் என்ற நிலைக்குப் போன செய்திகளும் இருக்கின்றன.

இதில் ஒன்றுதான் ஹோட்டல் தொழிற்துறையில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் என்ற செய்தி.

எம்டியூசி கூறிய இச்செய்தியை ஹோட்டல் தொழிலாளர்களைப் பிரதிநிதிக்கும் சங்கம் மறுத்திருப்பதாகத் தெரிகிறது..

நோக்கம் சிறப்பானது என்பதில் சந்தேகமே இல்லை. அதில் கூறப்பட்ட எண்ணிக்கைதான் பிரச்சினையாக எழுந்துள்ளது.

ஹோட்டல்களின் மதுபான விடுதி, அதில் செயல்படும் உணவுப்பிரிவு, அதை சார்ந்த பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் எனக்கணக்கிட்டால் கூறப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் ஊழயர்கள் சங்கத்தின் தலைமைச்செயலாளர் ரோஸ்லி அபாண்டி தெரிவித்திருக்கிறார்.

பத்தாயிரம் பேர் சமபளமில்லா விடுமுறையில் இருக்க வேண்டுமென்பதும் 6 அயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்குச் சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது என்பதாக எம்டியூசி தலைவர் அப்துல் ஹலீம் மன்சோர் கூறியிருக்கிறார்.

அவரின் புள்ளிவிவரத்தில் உண்மைத்தன்மை என்ன என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. இது சரியான புள்ளி விவரங்கள் அல்ல என்கிறார் அவர்.

ஒரு துறையில் உள்ள விவரங்களை மற்றவர்கள் கூறும்போது சிக்கல்கள் ஏற்பட்டுவிடும். சில வேளைகளில் சட்ட சிக்கல்களில் இழுத்துவிடும். அவரின் இந்தப்பதிவு சிந்திக்க வைப்பதாக ஹலீம் கூறியிருக்கிறார்.

எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் மெய்ப்பொருள் அறிவது நல்லது. ஹோட்டல்களின் தொழிலாளர்கள் தொடர்பில் போதுமான புள்ளி விவரங்கள் இல்லை என்கிறார் அவர்.

நாட்டில் ஏழு ஹோட்டல்கள் மட்டுமே முழுமையாக மூடப்பட்டிருக்கின்றன என்ற தகவலும் இருக்கின்றன.

முப்பதாயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு என்றால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டிருப்பதாகத்தானே அர்த்தம்?

கோலாலம்பூரில் 20 ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கின்றன என்றும் செய்தி இருக்கிறது. அப்படிப் பார்த்தாலும் 30 ஆயிரம் இருப்பார்களா?

இவற்றில் எது உண்மை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here