கறுப்பு என்பது நெருப்பு

உலகம் மிகப்பெரியது. அதில் லட்சக்கணக்கான நாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி ஆளுமை இருக்கிறது. அந்தந்த நாடுகள் தங்களின் தேவைக்கேற்ப ஆளுமைச் சட்டங்கலை வகுத்து, அதன்படி மக்களாட்சியை செய்துவருகின்றன.

இந்த நாடுகளில் கலவரங்கள் என்பது அதிகமிருக்காது. கலவரங்கள் நடைபெறும் நாடுகள் என்றால் வல்லரது நாடுகளாகதான் இருக்கும். மற்ற நாடுகளின் கலவரங்கள் குடும்பச்சண்டைபோல் மறந்துவிடும். மறக்கப்பட வைப்பார்கள். இதில், அரசியல் நெடிதான் அதிகமாக இருக்கும்.

வல்லரசு நாடுகளின் சண்டைகள் தீவிரமடைந்தால் அது மக்களைத்தான் பாதிக்கும். பொருளாதாரம் வீழும். பண வீக்கம் அதிகமாகும். புரட்சி வெடிக்கும். இதற்கெல்லாம் காரணம் ஆட்சிப் பொறுப்பாளர்களின் அத்து மீறல்களாகதான் இருக்கும்.

சில நாடுகள் பலம் பொருந்தியதாக இருக்கும்.  அது வெளியில் தெரியாது. சில நாடுகள் தங்கள் பலத்தைக் காட்ட முயல்வார்கள். அதன் பின் விளைவுகள் மோசமாகவும் இருக்கும். தலைமைச் சுயநலத்தால் மக்கள்தான் பலிகடா ஆவார்கள்.

இவற்றையும் தாண்டி தொற்று நோய்கள் உலகை அழித்துக்கொண்டிருக்கின்றன. மனித உயிர்கள் கொத்து கொத்தாய் மடிந்துகொண்டிருக்கின்றன. இவற்றைச் சமாளிக்க  உலக  அரசியல் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன.தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றன. மொத்ததில் மனுக்குல அழிவுகள் மலைபோல் குவிந்துகொண்டிருக்கின்றன.

அப்பாடா! என்று அமரும்போது அமெரிக்கா தலையில் குட்டிவிட்டது. அதன் எரிச்சல் தீயாய் எரிந்துகொண்டிருக்குக்கிறது. இனக்கலவரத்திற்கு விதைத்தூவியதை எந்தக் காமிராவோ படம்பிடித்துவிட்டது.

உலகக்கண்டுபிடிப்புகளில் காமிராவுக்கு மட்டும்தான் பாரபட்சமின்றி அனைவரையும் பிடிக்கும். அனைவருக்கும் பிடிக்கும். அதன் மொழி உண்மை மட்டும்தான். அது சொன்ன உண்மையால் கறுப்பு இனத்தின் மீதுள்ள வெறுப்பு வெளி உலகத்திற்கு வெளிச்சமாகிவிட்டது. வெலை கறுப்பு காலம் மாறிவிட்டது. அனைத்தும் வண்ணமாக மாறியதில் கறுப்பும் ஓர் கலவை நிறமாக ஆகிவிட்டபின்னும் கலவரமாகியிருப்பது அறிவிலித்தனம். இருட்டில் உறங்காத விஷமிகள்.

வெள்ளையர்கள் அனைவரும் தீயவர்கள் என்ற ஒட்டுமொத்த கருத்துக்கும் வந்துவிடக்கூடாது. அமெரிக்க வெள்ளையர்களில் மிகப் பெரும்பான்மையினர் நல்லவர்கள். சில தரப்பின் வனமத்தால் வெள்ளையர்களின் பெயர் களங்கமடைந்திருக்கிறது அவ்வளவுதான்.

இதில் ஒன்று மிகவும் கவனிக்கத்தக்கதாகப் பேசப்படுகிறது. மக்களின் பார்வையில் போலீஸ்துறை நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனைத் தாக்கினால் அதற்குப்பேர் சண்டை. கருத்து முரண் என்பார்கள் . அது கொல்லையாக இருந்தால் எதிர்பாராமல் நடந்தது என்பார்கள். இதையே போலீஸ்காரர் செய்தால் அதன் விளைவு வேறு. அதற்கான பெயரும் அடைமொழியும் வேறு.

அமெரிக்கா மட்டும் அல்ல, உலகில் எந்த நாடும் இப்படித்தான் காட்டும். அல்ல. மேலைநாடுகளில் கறுப்பர் என்பது வெறுப்பான நிறம் என்று ஆகிவிட எது காரணம்? அவர்களின் அன்றைய அடிமைத்தனமா? எதுவென்று தீர்மானிக்க முடியவில்லை

அரசின் பாரபட்சம் நாட்டையே சூரையாடிவிடும். அமெரிக்காவில் போனது ஓர் உயிர் மட்டும்தான். அதன் விளைவு பன்மடங்காகிவிட்டது. கொலைசெய்தது ஒரு பொறுப்புள்ள அதிகாரி என்பதுதான் பூகம்பத்திற்கு முழுமையான காரணம். பூகம்பத்தின் நிறம் கறுப்பு என்றாகிவிட்டது. கற்பின் நிறமும் கறுப்புதான்.

கறுப்பு பற்றிக்கொள்ளும் நெருப்பாகவும் இருக்கும் என்பது உண்மையாகிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here