மலாக்கா, புக்கிட் கட்டில் பகுதியில் உள்ள மனநல மையத்தின் கழிவறைக் குழியில் சிக்கிக் கொண்ட பெண் ஒருவர் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டார்.
உடல் உபாதையை தீர்த்துக் கொள்ள கழிவறையில் அமர்ந்தபோது அவரது கால்கள் கழிவறைக்குழியில் சிக்கின. நெஞ்சுப் பகுதி வரையில் குழியில் சிக்கிக் கொண்ட அவர் உதவி கேட்டு அலறினார்.
தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற புக்கிட் கட்டில் தீயணைப்பு மீட்புப் படையினர் அவரை மீட்டு மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாக மீட்புப்படையின் தலைவர் அலியாஸ் அமாட் தெரிவித்தார்