ஆலோசனை தேவையில்லையே!

நாட்டின் வளப்பம்தான் முக்கியமென்றால் வளமான ஆலோசனைகள் மட்டுமே போதாது. பங்களிப்பு வேண்டும்.

ஆலோசனைகளை இலவசமாக வாரிவழங்குவதால் மட்டும் உதவி செய்ததாக கருதவும் முடியாது. உதவும் எண்ணத்தோடு உபகரணங்கள் தருவது கூடுதல் நன்மையாக இருக்கும். உபகரணங்கள் எதுவாகவும் இருக்கலாம்.

உடலுழைப்பு, பணம், இயந்திரம். தொழிலாளர்கள். என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அப்படி செய்யப்படுகிறதா என்பதில் ஆம் என்ற சொல் மறைந்தே கிடக்கிறது.

இன்றைய நிலையில் ஆலோசனைகள் குவிந்து கிடக்கின்றன. அள்ளி எடுத்துப் பரிசீலிக்க நேரம் போதாது. அதனால், ஆலோசனையோடு ஆக்ககரமான உதவிகளும் வழங்கப்படுமானால் ஆலோசனைகள் ஆகாயமாகிவிடும்.

அரசாங்கம் எதைச்செய்ய வேண்டும் என்ற அலோசனைகளே அதிகம். அதை எப்படிச் செய்யவேண்டும். அதற்கு என்னென்ன தேவை என்ற வேண்டுதல்கள் மிகக்குறைவு. பொது இயக்கங்கள் உதவி தேடும் இயக்கங்களாக மட்டுமே இருக்கின்றன. உதவுகின்ற இயக்கங்களாக இல்லை. மிகக்குறைவாகவே இருக்கிறது.

எத்தனை காலத்திற்கு உதவி தேடும் இயக்கங்களை வைத்துக்கொண்டு தள்ளுவண்டிபோல் இருக்கப் போகிறார்கள் என்றும் சில தரப்பினர் கேட்கின்றனர்.

தேவைப்படுகின்றபோது உதவும் தகுதியில் இருக்கும் பொதுஅமைப்புகள் சரியான எண்ணிக்கையில் இல்லை. தேடிப்பார்க்கவேண்டிய நிலையில்தான் இன்னும் இருக்கின்றன. இயக்கங்கள் ஏழ்மையில் இருந்தால் உதவிகளை யாரிடம் பெறுவது. யார்தான் வழங்குவது?

பொது இயக்கங்கள் பொருளாரத்தோடு இருந்தால் மட்டுமே மதிப்பு . அதற்கேற்ப மாறுமா?

தேறுமா? மாற்றிக்கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here