கோவிட் 19 தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஜி.20 கூட்டமைப்பு 2,100 கோடி அமெரிக்க டாலர் நிதி உதவி

உலகை அச்சுறுத்தி வரும் கோவிட் 19 தொற்றினால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளிலிருந்து உலகம் மீண்டுக் கொண்டுவர ஜி.20 கூட்டமைப்பு 2,100 கோடி அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளன.

கோவிட் 19 ஏற்படுத்தியுள்ள பாதிப்பிலிருந்து மீண்டுவர உலக நாடுகள் தங்களது சக்தியை ஒருமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஜி20 கூட்டமைப்பு பரிந்துரை செய்திருந்தது. அந்த திட்டத்திற்கு இணக்கம் காட்டி ஒரு குடையின் கீழ் சேர்ந்துள்ள நாடுகளுக்கு உதவுவதற்காக 2100 கோடி அமெரிக்க டாலரை வழங்க முன்வந்துள்ளன.

இந்த நிதி, கோவிட் 19 தொற்றை கண்டுபிடித்தல், சிகிச்சை வழங்குதல், புதிய மருந்துகளை கண்டுபிடித்தல், அதற்கான சோதனை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும். இதன்வழி உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இந்த தொற்றைத் துடைத்தொழிக்கும் முயற்சியை மேற்கொள்ள முடியும் என்றும் அவை வலியுறுத்தி உள்ளன.

பணக்கார நாடுகள், வசதிபடைத்த அரசு சார்பற்ற இயக்கங்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட நிதி ஒன்றினை உருவாக்கி கோவிட் 19 தொற்றில் இருந்து உலகைக் காக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்பில் முதல் கட்டமாக 800 கோடி அமெரிக்க டாலர் நிதி திரட்டப்பட்டது.

தற்பொழுது அரேபியா 50 கோடி அமெரிக்க டாலரை நிதியாக வழங்கியிருக்கிறது. ஆக கடைசி நிலவரப்படி உலகம் முழுவதிலும் 66 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 108 பேர் மரணமடைந்துள்ளனர் இந்த மரண எண்ணிக்கை அதிகரிக்காமல் தடுத்து நிறுத்த ஜி20 நாடுகள் கூட்டு நிதி திட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here