இரவுச்சந்தை திறக்கப்படும் என்பது மக்களின் நலனுக்காக, மக்கள் கூடும் இடம் அல்ல. இரவுசந்தைகள் 10 மணிவரை திறப்பதற்கு அனுமதி இருக்கிறது என்பது சுதந்திர நடமாட்ட உரிமை அல்ல.
மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணை நிச்சயம் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பதை மட்டும் மறக்காமல் இருக்கவேண்டும். மறக்கப்படுமானால் என்ன நடக்கும்? கொரோனா தாண்டவம் ஆடத்துடிக்கும்!
சந்தைக்குள் நுழைவதற்கு முன் சுய பாதுகாப்பு மாநகர் மன்ற அதிகாரிகள் கையில் இல்லை மக்கள் கையில் இருக்கிறது.
சந்ததைக்குள் நுழையும்போதே சிந்திக்க வேண்டும். முகக்கவசம், முடிந்தால் கையுறை, கிருமி நாசினி திரவம் என்றெல்லாம் அவசியம் பயன்படுத்த வேண்டும்.
கடைப்பிடித்தலில் மக்கள் கைதேர்ந்து விட்டார்கள். கவலை குறைந்திருக்கிறது என்பதும் உண்மைதான். வேடிக்கை பார்க்கும் கொரோனா வேகாமாந் நுழைய அனுமதிக்கக் கூடாது. எட்டி இருந்தால் அது நெருங்க பயப்படும்.