சிம்புவுக்கு விரைவில் ஒரு நல்லது நடக்க வேண்டும் என்பதே தன் ஆசை என டி. ராஜேந்தர் தெரிவித்தார். சிம்புவுக்கு அவரின் பெற்றோர் தொடர்ந்து பெண் பார்த்து வந்தார்கள். பெண்ணை பிடித்திருந்தால் ஜாதகம் பொருந்தவில்லை. ஜாதகம் பொருந்தியிருந்தால் பெண்ணை பிடிக்கவில்லை என்று ஏதாவது ஒரு பிரச்சனையாக இருந்து வந்தது.
இந்நிலையில் சிம்புவுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்றும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவருக்கு நெருக்கமான நடிகர் வி.டி.வி. கணேஷ் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
சிம்புவுக்கும், லண்டனை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம். அந்த பெண் சிம்புவின் தூரத்து உறவினர் என்று கூறப்படுகிறது. அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு சொந்தமாக லண்டனில் சில கல்லூரிகள் இருக்கிறதாம். இந்த தகவலை சிம்புவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும் திருமணம் குறித்து சிம்பு தரப்பில் இருந்து இதுவரை உறுதி செய்யவில்லை. சிம்பு தன் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்யப் போகிறார் என்று கடந்த ஆண்டு மே மாதம் கூட தகவல் வெளியாகி தீயாக பரவியது. இதை பார்த்த சிம்புவோ எனக்கு தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை. நான் திருமணம் செய்யும் போது கண்டிப்பாக அறிவிக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்தார்.
























