படபிடிப்புகளுக்கு அனுமதி: நிபந்தனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் – டெனிஸ் குமார்

கோவிட் 19 உயிர் கொல்லி நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் 18ஆம் தேதி தொடங்கி நடமாட்டக் கட்டுப்பாட்டை ஆணையை அரசாங்கம் அறிவித்தது. அதன் பின்னர் நிபந்தனைகளுடனான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும் அமலில் இருந்தது. இதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

ஜுன் 10ஆம் தேதி முதல் மீட்சியுறும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆனணயின் (SOP) நிபந்தனைகளுக்கு கீழ் படப்பிடிப்புகளை தொடங்கலாம் என டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு கலைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று (FINAS) தேசிய திரைப்பட சம்மேளனத்தின் வாரிய உறுப்பினர் டெனிஸ் குமார் தெரிவித்தார்.

படபிடிப்புகளை தொடங்கினாலும் அரசாங்கம் விதித்திருக்கும் நிபந்தனைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். தொடுதல் முறையிலான காட்சிகளை தவிர்ப்பது, முகக் கவசம் அணிவது, செனிடைஸார் உபயோகிப்பது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கூட்டத்தை தவிர்ப்பது உள்ளிட்ட அனைதையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மலேசியாவில் ஏராளமான இந்திய கலைஞர்கள் உள்ளனர். எம்சிஒ காரணத்தினால் கலைஞர்கள் பல்வேறு சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். சிலர் கலைத்துறையையே நம்பி இருக்கின்றார்கள். அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு புத்தூயிர் அளித்துள்ளது.

இருப்பினும் சில கலைஞர்கள் எம்சிஒ காலக்கட்டத்தில் வீட்டில் இருந்த படியே குறும்படங்கள் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளனர். மக்கள் மத்தியில் அது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்று குறும்படங்களை எடுப்பவர்களுக்கு தமது பாராட்டுகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் தங்களுடைய புதுவிதமான படைப்புகளை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here