அத்துமீறல் என்பதும் எந்தக்காலத்திலும் ஏற்புடைய செயலாக இருக்கவே முடியாது. சாலை விதிகளை மீறினால என்ன நடக்கும் என்பதும் தெரியும். மற்றவர்கள் வீட்டுக்குள் புகுந்தால் வீடுடைப்பு என்பதும் தெரியும். பிறர் எல்லைக்குள் புகுந்து ஆக்கிரமிப்புச் செய்தால் பெருங்குற்றம். பொதுவாகவே மீறல் என்பது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்பதாகத்தான் இதுவரை அனைத்து தரப்பாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வீட்டுக்கருகே தோட்டங்கள் வைத்திருப்போர் பயிர்வளர்த்த தோட்டத்தில் கால்நடைகள் நுழைந்தாலே விரட்ட முனைவர். இப்படிச்செய்வது வீட்டுக்கொள்கை மட்டுமல்ல, உலகமே இந்தக் கொள்கையத்தான் கடைப்பிடிக்கிறது.
விரட்டுவதில் வன்மம் இருக்காது. அன்பான வார்த்தைகளாகத்தான் முதலில் இருக்கும். அப்படிச்செய்வது பல முறை கடப்பிடிக்கபட்டு தோற்றுப்போனால் அச்சுறுத்தல் நடக்கும். இதில் கால்நடைகள் யுக்தியை மனிதர்களுக்குப் பயன்படுத்த முடியாது. மனிதர்கள் செவிடர்களாக இருந்தால் ஆயுதங்கள் தானே பேசும். இப்படிச் செய்வதில் பல வழிகள் வெவ்வேறாய் இருக்கின்றன.
எப்படிச்செய்தும் காரியம் ஆகவில்லை என்றால் அதன் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என்பதில் ஒரு கதை தயாராகி, சினிமா ஆகிவிட்டால முடிவு, கேட்டவன் வீழ்வான், நல்லவன் வாழ்வான் என்பதாகவே இருக்கும். இது தான் பொது விதி. இதன் பெயர் தர்மம் வெல்லும்.
இதுதான் உலகியல் பாடம். இந்தப்பாடம் வீட்டில் தொடங்கி நாடு, வீடு உலகம் என்று விரிந்து, அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்ட பொதுவிதி. இதையெல்லாம் மதிக்காத வகையை போட்டு மிதி என்றுதானே சொல்வார்கள்.
ஒரு நாட்டின் எல்லையில், மீறல் என்றால் எந்த நாடுதான் மெல்லிசையை செவிமடுத்துக்கொண்டிருக்கும்? மண்புழுவாக இருந்தாலும் எதிர்ப்பைக்காட்டும். மரப்புழுவாக இருந்தாலும் கொடுக்கை விரித்து அதற்குள் முடங்கிம்கிடக்கும் மூர்க்கத்தைக் காட்டும்.
இவர்களவிட மக்கள் என்ன செய்வார்கள். உலகச் செவிகளுக்குள் ஏறுமாறு கூச்சல் எழுப்புவார்கள். இப்படியெல்லாம் செய்வது சாதாரண மனிதர்களின் நாட்டுணர்வு. இவர்களில் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்களே அவர்கள் விடுவார்களா?
அவர்கள் தேச பாதுகாப்பு படையினர். எல்லையை காக்கும் முனியாண்டி காவல் தெய்வகள். கருப்புசாமி, வெள்ளைச்சாமி, முனுசாமி, வீர்முனி, காட்டுமுனி, மதுரை வீரன், காத்தவராயன் எல்லாம் அவர்கள்தாம். அவர்களே எல்லையைக் காக்கும் எல்லைச்சாமிகள். அவர்களைத் தாண்டித்தான் எந்தக்கொம்பனும் ஊருக்குள் வரமுடியும்.
நேர்வழியில் நுழைந்தால் சுற்றுப்பயணிகள். எழி வழியில் நுழைந்தால திருட்டுப்பேர்வழிகள். எல்லைதாண்டி நிலைத்தை ஆக்கிரபமிப்பவர்களை சீ என்றுதானே கூறமுடியும்.
விடமாட்டான் எல்லைச்சாமி. தொடமாட்டான் பிறர் இடத்தை எதிர்த்து நின்றால் இமயம் கூட சுட்டுவிரல்.