தவறு தவறல்ல!

மறந்து வருகின்ற சில பழக்க வழக்கங்கள் பற்றிய கவலை இல்லாமல் மக்கள் நடமாட தொடங்கியிருக்கின்றனர். குறிப்பிட்டுசொன்னால் கைகுலுக்கும் பழக்கம் மறந்துபோகிறது. கட்டிப்புடி மறந்துபோய்விட்டது. முத்தமிடுவது குறைந்துவிட்டது. ஆடைகளை  மாற்றிக்கொள்வது தவிர்க்கப்படுகிறது. இதுபோல ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கின்றன. காலப்போக்கில் மறந்துவருகின்ற பல பழக்கங்கள் மறைந்தும் போய்விடும்.

தேவை என்று வந்துவிட்டால் மறதி கூட மகாத்மா ஆகிவிடும் என்பார்கள். இன்றைய இந்த மாற்றத்திற்கு ஏதாவது காரணம் இருக்கலாம்.  அது என்னவாக இருக்கும் என்பதும் புரியும்.?

அறிவியல் தொழில் நுட்பங்களில் முன்னோக்கிச் செல்லும்போதெல்லாம் பின்னோக்கித் துரத்திவருகின்ற விரோதங்கள் தொற்றுகளாக மாறிவிட்டன. அவை  மனிதர்களையே அதிகமாக குறிவைக்கின்றன. அத்ர்கும் மனிதர்களே காரணம். விவேகமாகப் பயன்படுத்தப்படும் போன்களும் நமக்கே எதிரியாகிவிடும் என்று எச்சரிக்கிறார்கள்.

உலகப்பொது அறிவில் நெருக்கமாகிக்கொண்டிருந்த நுண்ணறிவுத்திறன் மழுங்களாகிவருகிறது. இதனால் புதிய சிந்தனைக்கு மாற மக்கள் சிரமப்படுகின்றனர். தொற்றிலிருந்து விடுபட இன்னும் முறையான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த மனப்பாதிப்பிலிருந்து மக்கள் விடபட வேண்டுமானால் அரசாங்கம் சொல்லும் வழிகளைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும்.

மனக்குழப்பம் அடைவதில் பொதுநன்மைகள் இல்லை. இது போன்ற மனநிலை 1945 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவில் உருவாகியிருந்தது. அப்போதெல்லாம் தொற்று பற்றியெல்லாம் தெரியாமல் இருந்ததாம்.

அமரிக்காவில் வானொலி 1925 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போதுதான் அக்காலக்கட்டத்தில் பரவிய காய்ச்சலுக்குப் பாக்டிரியாதான் காரணம் என்பதை அறிந்தனர். அதன் பின்னர்தான் தடுப்பூசி பயன்பாடு உணரப்பட்டது.

ஒரு மருத்துவரின் கூற்றுப்படி ஒரு மருந்தின் உபயோகம் தெரிவதற்கு குறைந்தது ஓராண்டு ஆகும். அதனால் எந்த மருந்து உதவும் என்பதில் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இதற்கு ஒரே வழி கூடல் இடவெளி  கொள்கையைப் பின்பற்றுவதுதான்.

கோவிட் 19 முற்றாக நீங்குவதற்கு ஓராண்டுக்குமேல் ஆகலாம். அதுவரை அது மக்களோடுதான் வாழும். அதன்பாதிப்பிலிருந்து விடுபட கூடல் இடைவெளிதான சிறந்தது. அதனால் பழக்கங்கள் சிலவற்றை மறப்பதே நல்லது. நன்மை தராத பழக்க வழக்கங்கள் நம்மை விட்டு விலகுவதில் தவறே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here