புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரியும், அடிப்படை வசதிகள் கேட்டும் பல்வேறு பகுதகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் தனிமனித இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மீறப்பட்டன. ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பல்வேறு மாநிலங்களில் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாளில் கண்டறிந்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அடையாளம் காண மத்திய, மாநில அரசுகள் பட்டியலை தயாரிக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறுவது பற்றி அந்தந்த மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும்.

அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப விரும்பினால் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். வேலைவாய்ப்பை உறுதி செய்ய இலவச ஆலோசனை மையத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here