இளைஞர்களோடு நடுவயதினரும் பெரிதும் விரும்புவது காடுகள் தொடர்பான பயற்சிகள். ஊரடங்கு, சிவப்புப்பகுதிகள் என்று நடவடிக்கை கட்டுப்பாட்டிற்குள் வந்ததும் அனைதும் அடக்கமாகிவிட்டது.
இதனால கூட பலர் அமைதியாகிவிட்டர். அமைதி என்பதே ஆபத்தானது என்றும் கூறுவதுண்டு. அப்படித்தான் இளைஞர்கள் மாறிவிட்டனர்.
காடுகளில் கூடாரம் அமைத்து, நிகழ்சிகள் செய்வது விளையாட்டிலும் ஒன்று கூடலிலும் முக்கியமானது. மலையேறுதல் , ராணுவ வீரர்கள் போல் சாகசம் செய்வது எல்லாம் வீர விளையாட்டாகவே இருக்கும். இதில் மோட்டா சைக்கிள் விடுவதற்கென்றே மோட்டார் சைக்கிளகலை வடிவமைத்திருப்பார்கள்.
இவர்களுக்கெல்லாம் மன நிலையில் ஓர் இறுக்கம் இருந்து வந்தது.
அதற்கான நிவாரணம் நெருங்கிவிட்டது. ஜுன் 15 நாள் தளர்வுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 20 பேர் மட்டுமே கலந்துகொள்வது என்பதே மிகபெரிய செயதியாகும்.
இதில்,கடல் , நீர் தொடர்பான விளையாட்டுகள் காத்திருக்க வேண்டும். காடுகளின் சுவாசக்காற்று சுகமானது என்பதை அந்த வாய்ப்பை இழந்தவர்களுக்கே தெரியும்.
இவர்கள் இல்லாமல் காட்டு மரங்கள் கவலையில் இருக்கின்றன. ஒற்றையடிப்பாதைகள் ஓய்ந்து கிடக்கின்றன. ஒரே நாளில் முடித்துக்கொள்ள வேண்டும் என்பதில்தான் மனம் சோர்ந்திருக்கின்றனர்.
இல்லாதிருப்பதைவிட, கொஞ்சமாவது இருக்கிறதே!