கண்ணெதிரே ஒரு கடவுள்

ஓர் உயிரின் விலையென்ன என்பதில் இன்னும்கூட மக்களின் கவனம் திரும்பவில்லை. இதில் மனிதாபிமானம் பற்றிப் பேசுகின்றவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். சிலருக்கு மனிதாபிமானம் நிறைய இருக்கும். மனம் நிறைய கருணை இருக்கும். இருந்தாலும் ஏதும் செய்ய முடியாமல் இருக்கும்.

மனிதாபிமானத்திற்குரிய ஒருவர் மீது இந்த சமுதாயத்துக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதற்கு ஒரு சான்றாக இருக்கிறார் ஒருவர். அவர் பெயர் கடவுள்.

கடவுளா? ஆமாம் அவர் அப்படித்தான் கூறுகிறார். பெயர் கேட்டபோது அவர் அப்படித்தான் கூறுகிறார். இப்படி இருக்கிறீர்களே , ஏதாவது வேலை செய்யலாமே!

வேலை செய்கிறேன். மெளனமாக இருப்பதும் வேலைதான். இதைத்தான் ஆண்டவன் சொல்கிறார். ஆணடவன் சொன்ன வேலையைச் செய்வதுதான் கடவுளின் பணியாகக்கொண்டிருக்கிறேன் என்பவரை சுங்கை பூலோ பப்ளிக் வங்கியில் அடிக்கடி பார்க்கமுடியும்.

தெளிவாகப் பேசும் இவர் யார் என்பது தெரியவில்லை. இவரைப் பலருக்குத்தெரியவில்லை. இவரால் எவருக்கும் தொல்லையில்லை. யாரிடமும் பணம் கேட்பதில்லை. கொடுப்பதை மட்டும் வாங்கிக்கொள்கிறார்.

சமுதாயம், சமுதாயத்தலைவர்கள் எவரும் இவரைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. இவரும் அவர்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.

கடவுளுக்கு என்ன கவலை. வானமே கூரை. தரை எங்கும் தங்குமிடம்.

உணவுக்கு அன்றாடம் வழி பிறந்துவிடுகிறது. கடவுளைத்தேடி எப்போதாவது உறவினர்கள் வருகிறார்கள். பார்த்துவிட்டு போய்விடுகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. கடவுளுக்கு உறவினர்கள் கிடையாதே! அனைவரும் பக்தர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here