பயணத்தின் எல்லை

வெள்ளிக்கிழமை என்றாலே பலரின் முகங்கள் பளிச்சென்று ஆகிவிடும். அதற்கு என்ன காரணம் என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்குச் செல்வது என்பது உற்சாகமானது. குழந்தைகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

இந்த மகிழ்ச்சி வழக்கமானதுதான். பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகளுக்கும் இரு நாட்கள் மிகவும் பிடித்தமானதாக பயணமாக் இருக்கும்.

இந்த வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்குச் செல்லும் அழகே தனித்துவம் வாய்ந்தது என்கிறார் முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ சப்ரி யாக்கோப். அவர் சொல்வதிலும் அர்த்தமிருக்கிறது. அவருக்கும் அதில் ஆர்வம் இருக்கும்.

மூன்று மாதங்களுக்குப்பின் ஏற்படும் விடுதலை போல் ஊருக்குப்போகும் வெள்ளிகிழமையாக இந்த வெள்ளிக்கிழமை அமையப்போகிறது என்பது மட்டுமல்ல. நிழல் ஹரி ராயா நாளாகவும் இந்நாள் அமையப்போகிறது என்பதனால் சிறப்பாக இருக்கப்போகிறது.

ஹரி ராயாவுக்குச்செல்ல முடியாத வருத்தத்தை நிவர்த்தியாக்கும் நாளாக அமைய விருக்கும் இந்த வெள்ளிக்கிழமை மறக்க முடியாத நாளாக அமையப்போகிறது என்பது வார்த்தையல்ல. சாலைத் திருவிழாபோல் அது இருக்கும். வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் அடுக்கப்பட்டிருப்பதுபோல் இருக்கும். இதற்குச் சாலை நெரிசல் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.

மெல்ல மெல்ல நகர்ந்துதான் சொந்த ஊருக்குபோகவேண்டும் என்பதால் பயணம் திட்டமிடப்படவேண்டும்.

முக்கிய இடங்களில் போலீசார் பணியில் இருப்பர். நடைமுறை சட்டம் அனுசரிக்கப்படுவதை உறுதி செய்வர். மகிழ்ச்சியான தருணம் மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்பதில் கவனம் இருக்க வேண்டும் என்பதை இந்த வெள்ளிக்கிழமை கற்றுக்கொடுக்கப்போகிறது.

போகின்ற வழியில் முதன்மையாக இருக்க வேண்டியது சுகாதாரம். சுகாதாரம் கடைப்பிடிக்கப்பட்டால் மகிழ்ச்சியைத் தொட்டுவிட்டதாகக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here