மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி தொடங்கி 90 நாட்களை நெருங்கும் வேளையில் மனத்தை வருத்தும் செய்தி ஒன்று சிந்திக்க வைக்கிறது.
சாலைகளில் அதிகமான வாகனங்கள் ஓடவில்லை ஆனாலும் விபத்துகள் அதிகமாகத்தான் நிகழ்ந்திருக்கின்றன. மரணங்களும் அதிகமாகவே நிகழ்ந்திருக்கின்றன.
அந்நாட்களில் தினம்தினம் விபத்துகள் பதிவாகியுள்ளன. சாதாரனண நாட்களைவிட கூடுதலாகவே விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
முதல் நாளில் 19,376 என்ற பதிவில், விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. வாகன நெரிசல் விபத்துகளைக் குறைவாகவே காட்டுகின்றன. அப்படியானால் வாகனமோட்டிகள் கவனக்குறைவானர்கள் என்பதைத் தெளிவாகவே புரிகிறது.
மலேசிய வாகன மோட்டிகள் சட்டத்தை மீறுவதில் வல்லவர்கள் என்ற அடைமொழி அழுத்தமாகியிருக்கிறது.
ஒரு விபத்தினால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றிய கவலை இல்லை என்பதே காரணம் என்றாகிவிட்டது.
விபத்துகளால் உயிரிழப்பு, உடற்குறை. உடல் செயலிழப்பு, என்றெல்லாம் ஆகிவிடுகிறது. இதிலும் மருத்துவமனைகளில் கூடுதல் ரத்த சேமிப்பும் தேவைப்படுகிறது.
வாகனங்கள் அதிகரிப்பு என்று காரணம் கூறினாலும் வாகனத்தை இயக்கியவுடன் பிற உயிர்கள் சிந்தனை வந்துவிடவேண்டும். இதில்தான் குறைபாடு ஏற்பட்டுவிடுகிறது.
ஒரு விபத்து விபத்தாக மட்டும் இருக்காது. அது நீண்ட பட்டியலை உருவாக்கிவிடும். மருத்துமனை சேவையாளர்களும் அதில் அடங்கியிருப்பர். சுயபாதிப்பும் இருக்கிறது இருக்கிறது என்பதை நினைவில் கொண்டால் சாலைகள் சுகமான பயணத்திற்கான கோடுகள் என்பது தெளிவாகிவிடும்.
இதைத்தான் சுகாதார தலைமை இயக்குநர் கோடி காட்டுகிறார், சுகாதாரத்திற்கும் சாலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதல்ல. சாலையில் நிகழும் விபத்தால் மருத்துமனைகளே அதிகம் பொறுப்பேற்கின்றன. இது மருத்துவமனை பணியாளர்களுக்குக் கூடுதல் பணி.