தோற்றுப்போனவர்கள்

கொரோனா தொற்றின் காரணமாகத் தோற்றுப்போனவர்கள் அதிகம். உலகம் முழுவதும் பல லட்சம் பேர் சமாதியாகிவிட்டார்கள். மிகவும் கொடூரமானதாகக் கருதப்படும் தொற்றாக இருக்கும் கோரோனா சீனாவில் தொடங்கியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சீனா மறுக்கிறது. அமெரிக்கா வெறுக்கிறது. கொரோனா எங்கு பரவியது என்பதை விருப்பமுள்ளவர்கள் ஆய்ந்துகொண்டிருக்கிறார்கள். விருப்பமில்லாதவர்கள் அடுத்த கட்டத்திற்கு மாறிவருகிறார்கள்.

மக்களின் தவறான போக்கால் தொற்றின் எண்ணிக்கை லட்சங்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றன.

மக்கள் கூடல் இடைவெளிக்கு மதிப்பளிக்காத காரணத்தால் விளையும் கேடுகள் அதிகமாகிவருகிறது.

உலக நாடுகளில், இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு இதுதான் காரணம். மலேசியா சிறிய  நாடு. கொரோனாவை முறியடித்திருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் அவதிப்படுகின்றன.

மக்கள் பாதிப்பதை போலீசாரும்  முன்னணிப் பணியாளர்களும் திவிரமாகக் கவனிக்கிறார்கள். இவர்கள் மக்களோடு நெருங்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.

தென் அமெரிக்காவின் பெரு நகரில் 170 காவல்துறையினர் மரணமடந்திருக்கின்றனர். காவல் துறைக்கே இந்த கதியென்றால் பொதுமக்கள் நிலையென்ன?

மக்களைக்காக்க அரசியல் வாதிகள் களம் இறங்கமுடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here