ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தலா?

இவ்வாண்டு இறுதியில் நாட்டின் 15 ஆவது போதுத் தேர்தல் நடத்தப்படும் சூழலில் இன்றைய பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் சுழன்றுகொண்டிருப்பதாக செய்திகள் பரபரப்பாகிவருகின்றன.

தமக்குச் சாதகமாக மாற்றும் சந்திப்புகளை அவர் மேற்கொண்டு வருவதாகத்தெரிகிறது. கொள்ளைப்புற வழியாக பிரதமரான முஹிடின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்திருக்கிறார் என்ற குற்றப்புகாரை உடைத்தெறிய நாட்டின் போதுதேர்தலே சரியான முடிவாக இருக்கும் என்று டான்ஸ்ரீ முஹிடின் களமிறங்கி, சந்திப்புகளை நடத்திவருகிறார் என்று புறச்செய்திகள் கூறுகின்றன.

நாட்டின் இன்றைய சூழலில் மக்களையும் அரசியல் புள்ளிகளையும் சந்திப்பது நடமாட்ட கூடல் இடைவெளிக்குட்பட்டதாகவே இருக்கும். கொரோனாவில் அவரும் தனிமைப் படுத்திக்கொண்டிருகிறார். இது அரசியலாக இருக்கும் என்றும் ஒருதரப்பு கூறுகிறது.

அரசியலில் எதும் சாத்தியம், அல்லது சாத்தியமில்லை என்பதாகத்தான் இருக்கும் . சாத்தியமாக்கும் முயற்சியில் டான்ஶ்ரீ முஹிடின் பெரும்புள்ளிகளை வளைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இதற்கு, அம்னோ கைகொடுக்குமா? கைவிரிக்குமா என்பதில் நிலையான பதில் இல்லை. ஜூன் 4ஆம் நாள் நடைபெற்ற உச்ச மன்ற கூட்டத்தின்போது டான்ஸ்ரீ முஹிடின் தமது கட்சியின் மாநிலத் தலைவர்களைச் சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிற கட்சிகளும் பெரிக்காத்தான் கட்சியுடன் இணந்துகொள்ளலாம் என்று ஆரூடம் கூறப்படுகிறது. இவ்வேளையில் துன் டாக்டர் மகாதீர் முகம்மது, டத்தோஶ்ரீ நஜீப் இருவரிடையே நடக்கும் நடக்கும் குடுமிச்சண்டையில் டான்ஸ்ரீ முஹிடின் அதிக மீன்களைப்பிடிப்பார் என்ற யூகம் பலிக்குமா?

கோவிட் காலத்தில் டான்ஸ்ரீ முஹிடின் மக்கள் மனத்தில் இடம்பிடித்திருப்பதால் பொதுதெர்தல் அவருக்குக் கைகொடுக்கும் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

அரசு சார்பு நிறுவனங்களில் பதிவிகள் துருப்புச்சீட்டாக இருப்பதால் அரசியல் தலைவர்களை வளைப்பதில் முனைப்புக் காட்டுகிறார் என்பது யூகமா அல்லது உண்மைச்செய்தியா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here