ஊரடங்கு உத்தரவு மீறீயதால் தமிழகத்தில் 6,27,096 பேர் கைது

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும், 6 லட்சத்து 27 ஆயிரத்து 096 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 லட்சத்து 81 ஆயிரத்து 495 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 லட்சத்து 66 ஆயிரத்து 666 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.12,14,30,099 அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here