உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்து இந்திய வம்சாவளி டாக்டர் அங்கித் பரத் சாதித்துள்ளார். அமெரிக்காவின் சிகாகோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணுக்கு இரண்டு நுரையீரல்களும் முற்றிலும் செயலிழந்தன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, மூளைச்சாவு அடைந்த ஒருவரது நுரையீரலை அந்த இளம்பெண்ணுக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, இந்த சவாலான அறுவை சிகிச்சையை இந்திய வம்சாவளியான டாக்டர் அங்கித் பரத் தலைமையில் மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்டனர்.
வாஷிங்டன்: உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்து இந்திய வம்சாவளி டாக்டர் அங்கித் பரத் சாதித்துள்ளார். அமெரிக்காவின் சிகாகோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணுக்கு இரண்டு நுரையீரல்களும் முற்றிலும் செயலிழந்தன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, மூளைச்சாவு அடைந்த ஒருவரது நுரையீரலை அந்த இளம்பெண்ணுக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, இந்த சவாலான அறுவை சிகிச்சையை இந்திய வம்சாவளியான டாக்டர் அங்கித் பரத் தலைமையில் மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்டனர்.
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. உலகிலேயே கொரோனா நோயாளிக்கு இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பது இதுவே முதல் முறை. இது குறித்து மீரட்டை பூர்வீகமாக கொண்ட டாக்டர் அங்கித் பரத் கூறுகையில், ‘‘எதிர்காலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இதுபோன்ற சிகிச்சைகள் இனி அடிக்கடி நடக்க வாய்ப்புள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வது தொழில்நுட்ப ரீதியிலாக சவாலாக இருந்தாலும், இதனை பாதுகாப்பாக, வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என அனைத்து மருத்துவர்களும் நம்பிக்கை வைக்க வேண்டும். இதன் மூலம், நோயாளிகளுக்கு வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கான மன உறுதி கிடைக்கும்,’’ என்றார்.