கோவிட் 19 பெருதொற்றுக்கு இன்று 43 பேர் இலக்காகியுள்ள வேளையில் ஒருவர் மரணமடைந்தார்.
அதில் 5 வெளிநாடுகளிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். 23 பாதிப்பு வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றாகும். 15 பாதிப்புகள் மலேசியர்களுக்கு ஏற்பட்டதாகும் என சுகாதார துறை அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் இஷாம் கூறினார்.
இன்று மொத்தம் 143 பேர் குணமடைந்திருக்கும் வேளையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,311 ஆக பதிவாகியுள்ளது. மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 8,445 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் 1,014 பேர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரண எண்ணிக்கை 120.