தொற்றின் தாக்கம் உயிர்ப்பலிகளோடு நின்றுவிடவில்லை. அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்திலும் கை வைத்திருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி 1.9 விழுக்காட்டை எதிர்கொள்ளும் என்று கம்போடியா கூறியிருக்கிறது. அந்நாட்டின் பிரதமர் தெக் டெக்கோ ஹன் சென் தெரிவித்திருக்கிறார்.
இதன் தாக்கம் 2013 வரை எதிரொலிக்கும் என்பதால் நாட்டின் வளர்ச்சி தேக்கமாகவே காணப்படும் என்கிறார் அவர்.
பட்ஜெட் திட்டமிடல் அறிக்கையில் இதனைக்குறிப்பிட்ட அவர், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகம் பாதிக்கும். அதன் காரணத்தால் பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
சுற்றுலா, விவசாயம் பாதிப்பிகளால் இப்பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார், அவர். பிற நாடுகளைப்போலவே சுற்றுலாத்துறை தாழ்ந்துகிடக்கிறது .அதன் இழப்பை ஈடுகட்ட காலம் பிடிக்கும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடிருக்கிறார். ஆனாலும் பொருளாதாரம் 3.5 விழுக்காட்டை எட்டும் என்றும் என்றும் அவரின் நம்பிக்கை வலுவாக இருக்கிறது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் கம்போடியா தீவிரமாக இறங்கிவருகிறது.