காகிதப் பூக்கள்

மக்களின் மனநிலை அறியாமல் கட்சிக் காளான்கள் குடை பிடிக்கின்றன. தோன்றி மறைவதற்கு நடசத்திரங்களைக் கூறியவர்கள், கோரோனாவுக்குபிறகு கட்சிகளைக் கூறுகின்றனர்’

மழையின்போது காளான்கள் தோன்றும். பொதுத்தேர்தலின்போது கட்சிகள் தோன்றும். அதோ! தூரத்தே 15 ஆவது பொதுத்தேர்தல் தெரிகிறதே! அதற்கு அறிகுறியாய் கட்சிகள் பூக்கத் தொடங்கிவிட்டன. அனைத்தும் காகிதப்பூக்கள். மனமும் இல்லை, மணமும் இல்லை.

காளான்கள் எத்தனை காலம் வாழும் என்பதுதான் கேள்வி. இருக்கும் கட்சிகுள் இருப்பவர்களே பிரச்சினைகளுக்கும்  காரணமாகியிருக்கின்றனர். இவர்களே புதிய தோன்றல்களுக்கும் துணைபோகின்றனர்.

போகும் இடத்திலும் இதே நிலைதான் உருவாகும் என்பது கணிப்பல்ல உண்மை. அடிப்படைக்குணம் மாறாதவரை நாற்றம் போகாது. அதே நாற்றம் எங்கு சென்றாலும் வரும்.

சட்டையை மாற்றிக்கொள்வது தற்காலிகம் மட்டுமே! மக்கள் எப்போதுமா ஏமாந்துகொண்டே இருப்பார்கள்? மாறுவர்கள். மாறும்போது ஏமாற்றம் மாறிவிடும்.

வரும் பொதுத்தேர்தல் துரோகங்களுக்குப் பரிசு வழங்கும் தேர்தலாகவே இருக்கும். அரசியல்  பாடம் புகட்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாம் சரியாகவே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here