நவீன பேரரறிஞர்கள்

இன்றைய நவீன உலகத்தில் ஒழிக்கவும், அழிக்கவும் முடியாதது இருக்கிறதா? இப்படித்தான்  ஒரு பையன் கேட்டான். இந்தக்கேள்வி சதாரணமாகத் தோன்றலாம். இது சாதாரணமல்ல.

சீன நாட்டின் மேதை ஒருவர் இருந்தார். அவர் பெயர் கன்ஃப்பூஸியஸ்.  காலை உதயத்தின்போது அவர் நடந்துபோகும்  பாதையில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு சுட்டிச்சிறுவன் அவரிடம், கலையில் உதிக்கும் சூரியன் பெரிதாக இருக்கிறது. அப்படியென்றால் அருகில் இருக்கிறது என்பதாகத்தானே அர்த்தம்? நண்பகலில் சிறியதாக இருக்கிறது. அப்படியென்றால் தூரத்தில் இருக்கிறது என்றுதானே அர்த்தம். தூரதிலிருப்பது ஏன் அதிக சூடாக இருக்கிறது? நீங்கள்தான் பேரரிஞராயிற்றே விளக்கம் தருவீர்களா என்றான்.

சிறுவனுக்கு ஏற்றவாறு சொல்வதென்றால் அவரிடம் பதில் இல்லை. இதே கேள்வியை தமிழ்நாட்டுச் சிறுவனிடம் கேட்டிருந்தால். காலையில் கடலில் குளிக்கும் சூரியன் சுடாகாது என்று பதில் சொல்லியிருப்பான். நடுப்பகலில் ஈரம் காய்ந்திருக்கும் என்றும் கூறியிருப்பான்

பேரரறிஞர் பதில் சொல்லாமல் போய்விட்டார். சிறுவர்கள் அவரைக் கேளிசெய்தனர் என்பது செய்தி.

அழிக்கவும், ஒழிக்கவும் முடியாதது ஒன்று இருக்கிறதென்றால் அது கொரோனா என்று கூறலாமா? இல்லை. அழிக்கமுடியாதது. நெகிழி என்பதுதான் விடையாக இருக்கும்.

நெகிழி அழிப்பு பேசப்பட்டது, வாரம் ஒருமுறை என்றார்கள் அது தோற்றுப் போய்விட்டது. இப்போது தினம்தினம் நெகிழி என்பது மாமியார் கதைபோல் ஆகிவிட்டது.

அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்பதில் கொரோனா இல்லை. நெகிழி மட்டுமே நிற்கிறது. இன்றுவரை மாநில நடவடிக்கைகள் எடுபடவில்லை. சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்றாகிவிட்டது.

இதில், பேரங்காடிகளில் வசூலிக்கப்படும் 20 காசு எதற்கு? இதை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் சிறுவர்கள் கேட்கின்றனர்.

இதற்குப்பதில் சொல்ல கன்ஃபூஸியஸ் தேவையில்லை. கடமையில் உள்ள மாநில அரசு போதும்.

பேரங்காடிகளில் கடைகளிலும் நெகிழிப்பைகள் இலவசமாக வழங்கல் வேண்டும். மாநில அரசு நெகிழியை அழிக்க முடியாமல் பின்வாங்கிவிட்டதால் நெகிழிக்குத்தருவது விரயம். இலவசமாக கொடுப்பதும் பொருள்களை பத்திரமாகக் கொடுப்பதும் பேரங்காடிகளின் வேலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here