பேஸ்புக் மூலம் பெரிய உதவி செய்கிறோம்

பினாங்கு மாநில டாக்டர்களுக்கு, முகத்தை மூடும் பாதுகாப்பு கவசம் தயாரித்து, இலவசமாக வழங்கி வருகிறார் இந்திய பெண் திவ்யா.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு, முக கவசம் மட்டுமின்றி, கண்களுக்கு, ‘ஷீல்டு’ம் அணிய வேண்டியது அவசியம்.

மருத்துவர்கள் பயன்படுத்தக் கூடிய அந்த ஷீல்டுகளை, இங்கே நாங்க, 300 பேர் சேர்த்து தயாரிச்சிக்கிட்டிருக்கோம். ‘டிரான்ஸ்பரன்ட் ஷீட், ஸ்பாஞ்ச், எலாஸ்டிக்’ பயன்படுத்தி இந்த ஷீல்டை தயார் பண்ணணும்.

பக்கத்துல இருக்கிற மருத்துவமனைக்கு மட்டுமே, ஒரு வாரத்துக்கு, 2,000 ஷீல்ட்ஸ் அனுப்பிட்டிருக்கோம். எல்லாம் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக் கூடிய வகையிலானவை. ஒருபக்கம், மருத்துவர்களுக்கு ஷீல்டு தயாரிப்பதுடன், மறுபக்கம், சந்தை, வங்கி, போஸ்ட் ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்களுக்கும், உணவு, ‘டெலிவரி’ பண்றவங்களுக்கும், தரமான முக கவசம் தயாரிச்சுக் கொடுத்திட்டிருக்கோம்.

கொரோனா பணிகளில் முன்வரிசையில் இருக்கிறவங்களுக்கு நம்மாலான உதவியா, எதையாச்சும் செய்யணும்னு, இதைப் பண்ணிட்டிருக்கோம்.’பேஸ்புக்’ சமூக வலைதளத்தில், ஒரு நண்பர், தன் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற மருத்துவமனையில டாக்டர்களுக்கு, ‘பேஸ் ஷீல்டு’ போதுமான அளவு இல்லைன்னு வருத்தப்பட்டிருந்தார். ‘இதுக்கு நம்மளால எந்த வகையிலாச்சும் உதவ முடியுமா’னு, நான் உட்பட பலரும், ‘கமென்ட்’ல கேட்டிருந்தோம். அந்தப் பேச்சு அப்படியே வளர்ந்து வளர்ந்து, ‘இந்த ஷீல்டுகளை நாமளே ஏன் செய்யக் கூடாது’ங்கிற கேள்வியில வந்து நின்றது. ஒருத்தர், ‘அதுக்கான, ‘டிரான்ஸ்பரன்ட் ஷீட்’ நான் தரேன்’னு சொன்னார்.

இன்னொருத்தர், ‘எனக்கு எலாஸ்டிக் தயாரிக்கிறவங்களைத் தெரியும், மொத்தமாக நான் வாங்கித் தர்றேன்’னு சொன்னார். ‘3டி’ பிரின்ட் மெஷின், நான் கொடுத்தேன்.

என்னை மாதிரியே இன்னும் சிலரும் உதவி செஞ்சாங்க. சிலர் ஷீல்டு தயாரிச்சுக் கொடுக்க, சிலர் தயாரிப்புகளை எல்லாம், மருத்துவமனைகளுக்குக் கொண்டு குடுக்குற வேலை பார்க்குறாங்க.இப்போ ஆண்கள், பெண்கள், இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள், 300 பேர் இந்த ஷீல்டு தயாரிப்புல ஈடுபட்டிருக்கோம். இதுல, ‘டெலிவரி’ எடுக்கிறவங்களை மட்டும் தான், நேர்ல பார்க்க முடியும். மத்தவங்க எல்லாரும், ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப்’ல தான் தொடர்புல இருக்கோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here