சமய இழிவுகள் முரணானது

சொரியுள்ளவனுக்கு சொரிந்துகொள்வதில் சுகம். திருடனுக்குத் திருடுவதில் அலாதி சுகம். இப்படித்தான் பல சுகவாசிகள் சமூகத்தில் நடமாடுகிறார்கள். இவர்கள் ஒருவகை. இதிலும் இன்னும் சற்றுக் கூடுதலாக பிற சமயங்களைத் தீண்டுகின்றவர்கள் ஒரு ரகம். இதற்காகவே இடம் மாற்றத்திற்கு ஆளாகிறார்கள்.

இவர்களில் ஒருவராக மனநிலை பாதிக்கபட்டு, சமய சீண்டல்களைச் செய்துவரும் ஸம்ரி வினோத். மனநிலை பாதித்திருப்பவர்போல் பிற சமயத்தை இழிவு செய்வதை அறியாமல் இருக்கிறதா காவல்துறை என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

உயிர்கொடுத்த சமூகத்தை விட்டு ஒதுங்கிவிட்டபின், இழிவு செய்துகொண்டிருப்பது தன் தாயையே இழிவு செய்வதாகத்தான் நினைக்கத்தோன்றுகிறது. ஒதுங்கியதை  எவரும் தடுக்க வில்லை. மலம் தின்னும் பிராணிகளை மதிக்கின்ற அவசியம் இந்தியர்களுக்கு இல்லை. அதுபற்றி விமர்சிப்பதும் இல்லை. விமர்சித்தவர்களும் இல்லை.

விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் ஸம்ரி வினோத் தான்  சார்ந்த இடத்தைப் பற்றி விமர்சனம் செய்து பிழைத்துக்கொள்வதே மேல். அதைவிட்டு தாயைத் தரங்கெட்டவள் போல் பேசினால், அந்த பிறப்பே தப்பானதுதானே!

இந்து சமயத்தில் பிறந்த எவர் எப்படி ஆகவேண்டும் என்று தேர்வு செய்வது அவர் விருப்பம். இந்து சமயத்தின் முகவரி இழந்த ஒருவர் இந்து சமயத்தைதவறாகப் பேசுவதென்றால் அவருக்கு மன நிலை சரியில்லை என்றுதானே அர்த்தம்.

மனநிலை பாதிக்கப்பட்டவர் இன்னும் வெளியில் நடமாடுவது பாதுகாப்பனது  அல்ல.சமய துஷ்பிர்யோகம் செய்துவரும் அவரைப்பற்றிக் காவல்துறையில் புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்து சமயத்தை இழிவு செய்திருப்பதால், அரசு விதிப்படி தேசத்துரோகமாகும். அவர் மீது நடவடிக்கை தேவை.

நாட்டின் பேரரசரோ மக்கள் ஒற்றுமைப் பற்றிப் பலமுறை பேசியிருக்கிறார். அவர் கருத்துக்கு எதிராக ஸம்ரி வினோத் பேசிவருவது பேரரசரின் கருத்துக்கு எதிராக இருக்கிறது. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here