வறுமையின் காரணமாக ஆட்டோ டிரைவர் தற்கொலை !

பாட்னாவைச் சேர்ந்த ரவி ஒரு ஆட்டோ டிரைவர். ஊரடங்கு போட்டதில் இருந்தே ஆட்டோ ஓட்டமுடியவில்லை. அதனால் இந்த 3 மாசமாக அவரால் ஏற்கனவே வாங்கிய வங்கி தவணையை செலுத்த முடியவில்லை. ஆனால் வேலை இல்லாவிட்டாலும் அந்த வங்கி தவணையை சரியாக செலுத்தி வந்தார் .ஒரு கட்டத்தில் அவரால் அதுவும் முடியாமல் போய்விட்டது. இந்த சமயத்தில்தான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சனிக்கிழமை இரவு கதவை சாத்திக் கொண்ட ரவி, ரொம்ப நேரமாகியும் திறக்கவே இல்லை.. சந்தேகப்பட்டு உள்ளே நுழைந்து பார்த்தபோதுதான் அதிர்ச்சியில் குடும்பத்தினர் அலறி துடித்தனர்.ஊரடங்கு கொடூரமும், வறுமையும் ரவியையும் விட்டுவைக்கவில்லை! 5வது கட்டமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது.. அதேசமயம் தளர்வுகளும் அமலாக்கப்பட்டுள்ளது. என்றாலும் தொழிலாளர்களால் இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.

3 ஆம் கட்ட பொதுமுடக்கத்தில் இருந்தே இந்த தளர்வுகள் வந்தாலும், பழைய மாதிரி இயல்பு வாழ்க்கையை நகர்த்த முடியவில்லை.சரியான வேலையும் கிடைக்கவில்லை. அரசு அறிவிக்கும் அறிவிப்புகளும் இவர்களுக்கு போதுமானதாக இல்லை. அதனால் தொடர்ந்து வறுமையில் சிக்கி உழலும் நிலை ஏற்பட்டுள்ளது.. அந்த வகையில், ரவி வெகுவாகவே பாதிக்கப்பட்டார்.

இதை பற்றி அவரது அப்பா சொல்லும் போது, “சனிக்கிழமை இரவு ரூமுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டான். ரொம்ப நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. அதனால் சந்தேகம் வந்து, கதவை உடைச்சிக்கிட்டு உள்ளே போனோம். அங்கே தூக்கில் தொங்கி கொண்டிருந்தான் என் மகன். உடனே மருத்துவமனைக்கு தூக்கி சென்றோம், ஆனால் அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

அவனை நம்பிதான் இந்த குடும்பமே இருந்தது ஆனால் 3 குழந்தைகளையும் பாராமல் இப்படி தற்கொலை செய்து கொண்டானே. எப்படி இனி வாழ போகிறோம், எங்களுக்குன்னு இன்னும் ரேஷன் கார்டுகூட தரவில்லை” என்று கண்ணீருடன் தெரிவித்தார். ரவியின் இந்த தற்கொலை அந்த மாவட்டத்தையே நிலைகுலைய வைத்தது.. உடனே அரசு அதிகாரிகள் ரவியின் வீட்டிற்கு சென்று 25 கிலோ அரிசி, கோதுமையை நிவாரணமாக தந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here