தொழிற்துறைகள் தொடங்க நிபந்தனைகள்

நாட்டின் பெரும்பாலான தொழிற்துறைகள் பணி இயக்கக் கட்டுப்பாட்டுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால் பொருளாதார மீட்சிக்கும் வேலையிழப்புக்கும் வழி பிறந்திருக்கிறது.

பல தொழிற்துறைகள் இன்னும் முழுமையான செயல்பாட்டுக்குத் திரும்பவில்லை என்பதை பரிசோதனைகள் வழி கண்டறியப்பட்டுள்ளன. 17 கட்டுமானத்துறைகள் முடக்கப்பட்டிருக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கட்டுமானத்துறை முடக்கத்தில் இது ஒரு விழுக்காடு மட்டுமே!

கட்டுமானத்துறை மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். விபத்துகள் நிறைந்த பகுதியாகக் கருதப்பட்ட கட்டுமானத்துறைகளில் கூடல் இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை. அதனால் தொற்றின் எண்ணிக்கை கூடுவதற்கு கட்டுமானப் பகுதிகளும் ஒரு காரணமாக இருப்பதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதன் காரணமாக 17 கட்டுமானப்பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

ஜூன் மாதம் 13ஆம் நாள் வரை 7,699 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பல குத்தகைப் பகுதிகள் முழுமையான பணிமுறைகளை நிறைவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளன.

குத்தகைப் பகுதிகளில் உள்ள கூட்டு குடியிருப்புகள் நிறைவாக இல்லை என்பதும் முடக்கப் படுவதற்குக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக படுக்கைகள் நெருக்கமில்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியானது. தொழிலாளர்கள் தங்குமிட வசதிகள் சுகாதாரத்தைப் பின்பற்றியிருக்க வேண்டும்.

அனைத்து நிபந்தனைகளும் நிறைவு செய்வதற்கு ஆகஸ்டு 31ஆம் நாள்வரை காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

நிறைவு செய்திராத பகுதிகள் இயங்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here