ஓடும் பேருந்தில், குழந்தை முன்னிலையிலே தாய் பாலியல் பலாத்காரம்

உத்தரப் பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் சக பயணிகள் இருந்தபோதும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பேருந்து ஓட்டுநர்கள் குறித்து வழக்குப் பதியப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் நொய்டாவிலிருந்து பெண் ஒருவர் தனது குழந்தையைக் கூட்டிக் கொண்டு மதுராவிற்கு பேருந்தில் சென்றுள்ளார். அந்த பேருந்து படுக்கை வசதி கொண்டது.

சம்பந்தப்பட்ட பேருந்தில் 12ற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். இரவு பேருந்து லக்னோ, மதுரா சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் இரு ஓட்டுநர்கள் குறிப்பிட்ட பெண்ணை தொந்தரவு செய்துள்ளனர்.

அதில் ஓட்டுநர் ஒருவர் குறிப்பிட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த அவலம் நிகழ்த்தப்பட்டபோது பேருந்தில் 12 பயணிகளும் இருந்துள்ளனர்.
கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் கவுத்தம புத்தா நகர் காவல் நிலையத்தில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கவுத்தம புத்தா நகர் போலீஸ் கூறுகையில், “புகாரைப் பெற்றவுடன் வழக்குப் பதிவு செய்துவிட்டோம். சம்பந்தப்பட்ட பேருந்தைப் பறிமுதல் செய்துள்ளோம். சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். பேருந்தில் வந்த பயணிகள் அனைவரையும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.

ஓடும் பேருந்தில் நிகழ்த்தப்பட்ட இந்த அவலம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்பு, பொதுமக்களின் நடத்தை முதலானவை குறித்துக் கேள்வி எழுப்புகின்றன. பொதுமக்கள் பயணிக்கும் பேருந்தில், சக பயணிகள் நடுவில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்றால், நம்து சூழலின் பாதுகாப்பைப் பற்றி என்ன சொல்வது என்னும் கவலையை இது ஏற்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here