இணைய நேரலையில் 12 மணி நேரம் இடைவிடாது யோகா பயிற்சிகள்

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பேர் பங்கேற்க கூடிய வகையில் இணைய நேரலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த தினத்தில் மலேசியா உட்பட பல நாட்டு மக்கள் ஒன்றுக் கூடிய யோகா பயிற்சிகளை மேற்கொள்வர்.

ஆனால் தற்போது கோவிட் 19 தாக்கத்தினால் அனைவரும் ஒன்றுக் கூட முடியாத பட்சத்தில் இணையம் மூலம் இந்த யோக தின பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் கூறினார்.

மலேசிய யோகா சங்கம், மலேசிய அண்டி ஏஜிங் யோகா வெல்னஸ் இயக்கம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த புதிய முயற்சியை மேற்கொள்ளவுள்ளன.

யோகா மாஸ்டர் அண்ட்ரியன் சுரேஸ் தலைமையில் உலக யோகா தினம் இணைய நேரலை வாயிலாக அனுசரிக்கப்படுகிறது. தலைநகரிலுள்ள சிக்னேச்சர் தங்கும் விடுதியில் உலக யோகா தினத்தின் தொடக்க நிகழ்வுகள் நடைபெறும்.

அதை தொடர்ந்து, காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இடைவிடாது 12 மணி நேரத்திற்கு யோகா பயிற்சிகள் நேரலையில் நடத்தபடவுள்ளன.

மலேசியா, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து என 11 நாடுகள் இந்நிகழ்வின் வாயிலாக ஒன்றிணையவுள்ளன. சுமார் ஒரு லட்சம் பேர் இணையும் இந்த யோகா தின அனுசரிப்பு மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பெறவும் பணிகள் மேற்கொள்ளபடும்.

உடல் மட்டும் இன்றி மனதிற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் யோகாவை மலேசியர்கள் செய்ய வேண்டும் என்று பிரபாகரன் கேட்டு கொண்டார்.

நாளை 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த யோகா தினத்தில் முதலில் பதிவு செய்யும் 1,000 மலேசியர்கள் இலவசமாக யோகா பயிற்சிகளை வழங்கும் வாய்ப்புகள் வழங்கப்படும். 200 வெள்ளி மதிப்பிலான இந்த யோகா பயிற்சி வகுப்பு இணையம் வாயிலாக நடத்தப்படும். எனவே மக்கள் திரளாக வந்து இந்த யோகா தினத்தில் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாஸ்டர் அண்ட்ரியன் சுரேஸ் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here