ஹாலிவுட் இயக்குநர் புதுச்சேரிக்காரரா!

திரைப்பட உலகில் அதிகப்படங்கள் வெளியாகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியத்திரப்படங்கள் ஆங்கிலேயர்களை அதிர்ச்சியில் ஆழத்தியிருக்கின்றன.

ஒரு காலத்தில் எந்தத் தொழில்நுட்பக் கருவிகளும் இல்லாமல் மாயாஜால படங்கலை இயக்கி பெருமை தமிழ் இயக்குநர்களுக்கு உண்டு. முதன் முதலில் டப்பிங் குரல் பதிவுகளை தமிழ்திரையுலகம் தான் கண்டுபிடித்ததாக ஒரு செய்தியும் உண்டு.

தமிழ் நாட்டுக்காரார் ஹாலிவுட்டில் பேர் போடுகிறார் என்பது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெருமை.

சென்னையில் தனது முதல் பட ஷூட்டிங்கை நடத்தியபோது எடுக்கப்பட்ட போட்டோவை, பிரபல ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன் வெளியிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலம் மாஹேவில் பிறந்தவர் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன்.

பென்சில்வேனியாவில் வளர்ந்த மனோஜ், 1999 ஆம் ஆண்டு ‘தி சிக்ஸ்த் சென்ஸ்’ படம் மூலமாக மிகவும் பிரபலமானார். சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான இது, சிறந்த இயக்குநர், சிறந்த படம் என ஆறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

புரூஸ் வில்லிஸ், டோனி கொலட்டே, ஒலிவியா வில்லியம்ஸ் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்குப் பிறகு, தொடர்ந்து பல படங்களை இயக்கினார் மனோஜ் நைட் ஷியாமளன்.

பிரேயிங் வித் ஆங்கர் புரூஸ் வில்லீஸ், சாமுவேல் ஜாக்சன், ராபின் ரைட் பென் நடித்த அன்பிரேக்கபிள், சயின்ஸ்பிக்சன் ஹாரார் படமான சைன்ஸ், தி வில்லேஜ், தி லாஸ்ட் ஏர்பென்டர், ஆஃப்டர் எர்த், ஸ்பிளிட், கிளாஸ் உட்பட பல படங்களை இயக்கினார். ஆனால், இவரது முதல் படம், 1992 ஆம் ஆண்டு இயக்கிய, பிரேயிங் வித் ஆங்கர் (Praying with Anger). மனோஜ் நைட் ஷியாமளன் தயாரித்து, இயக்கி, நடித்த படம்.

நடிகர், இயக்குநர், கதை, என பரிணாமங்களைக் கொண்ட ஷியாமளன் தமிழ் மண்ணுக்கு உரியவர் என்பது எத்தனை பேருக்குத்தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here